எஸ்.கே மாதிரி ஹிட் கொடுக்கணும்!.. சம்பளம் கேட்டா போதாது!.. சிம்பு, தனுஷை பொளந்த பிரபலம்!…

Sivakarthikeyan: சினிமா என்பது போட்டிகள் நிறைந்த உலகம்தான். வெற்றி படங்களை கொடுத்து தனது சம்பளத்தை ஏற்ற வேண்டும் என்பதை விட போட்டி நடிகருடன் ஒப்பிட்டு தன்னுடைய சம்பளத்தை உயர்த்துவார்கள். இதில் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். இதைப்பற்றியெல்லாம் நடிகர்கள் கவலைப்படுவதில்லை. விஜயின் சம்பளத்தை பார்த்து ரஜினியே சம்பளத்தை உயர்த்தினார்.
4 வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காத கமல்ஹாசன் விக்ரம் எனும் ஒரே ஹிட் படத்தை கொடுத்துவிட்டு தனது சம்பளத்தை 100 கோடிக்கும் மேல் ஏற்றினார். அதற்கு முன் அவர் வாங்கி கொண்டிருந்த சம்பளம் வெறும் 30 கோடிதான். கல்கி படத்தின் 2 பாகத்திலும் நடிக்க கமல்ஹாசன் பேசிய சம்பளம் 150 கோடி.
நடிகர்கள் தங்களின் படங்கள் எவ்வளவு வசூல் செய்கிறதோ அதை வைத்தே சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும் ,வினியோகஸ்தர்களும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால், யாரும் அப்படி யோசிப்பது இல்லை. சிம்பு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால், ஒழுங்காக படப்பிடிப்புக்கு போகாமல் குடைச்சல் கொடுத்து பேர கெடுத்துக்கொண்டார். மேலும், தொடர்ந்து நடிக்கவும் மாட்டார். ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டு 2 படங்கள் பிளாப் கொடுப்பார்.

சிம்புவுக்கு பின்னால் வந்த தனுஷ் சிம்புவை ஓவர் டேக் செய்து சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அதோடு, இயக்குனராகவும் மாறிவிட்டார். ஆனால், சிம்பு, தனுஷ் ஆகிய 2 பேருக்கும் பின்னாடி வந்த சிவகார்த்திகேயன் இவர்களை விட 3 மடங்கு சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய வினியோகஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ‘டாக்டர், டான் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு தனது சம்பளத்தை 30 கோடியாக மாற்றினார். தனுஷ் அப்போது 10 கோடியும், சிம்பு 8 கோடியும் வாங்கி கொண்டிருந்தார்கள். மாநாடு படத்திற்கு சிம்பு வாங்கிய சம்பளம் 8 கோடிதான்.
ஆனால், சிவகார்த்திகேயன் 30 கோடி எனில் நாங்கள் அவரின் சீனியர். எங்களுக்கு 35 கோடி கொடுங்கள் என கேட்கிறார்கள். சிவகார்த்திகேயனை போல நல்ல இயக்குனர், கதையை செட் செய்து ஹிட் கொடுக்க வேண்டும் என யோசிக்காமல் சம்பளத்தில் மட்டும் போட்டி போடுகிறார்கள்’ என பொங்கியிருக்கிறார்.