மீண்டும் வேலையை காட்டும் சிம்பு.! ஒரு தடவை கதை கேளுங்க சார்.! கெஞ்சும் தயாரிப்பாளர்.!
சிலம்பரசன் ஒழுங்காக அவருக்கேற்ற கதைகளை தேர்வு செய்து சினிமாவில் நிலைத்து நடித்திருந்தால், இந்நேரம் விஜய் அஜித் அளவுக்கு நிச்சயம் பெரும் புகழ் அடைந்திருப்பார். ஷூட்டிங் தேதி சொதப்பல், அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு படம் நடிக்காமல் இழுத்தடித்தது என பல புகார்கள் எழுந்ததை அடுத்து அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் தன்னுடைய பழைய நிலைமைக்கு வந்து, மாநாடு திரைப்படம் மூலம் திரையுலகமே வியக்கும் வண்ணம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என அடுத்தடுத்து படங்களில் புக் ஆக தொடங்கினார்.
இதையும் படியுங்களேன் - ஐயோ, சார்பட்டா நான் பண்ண வேண்டிய படம்.! ஆர்யா தட்டி பறிச்சிட்டார்.! குமுறும் அந்த நடிகர்.!
அவரிடம் ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து சிம்புவிடம் ஒரு வரி கதை கூறி ஓகே வாங்கிவிட்டார். தயாரிப்பாளரும் ஓகே சொல்லிவிட்டார். அதன் பிறகு அதனை இயக்குனர் டெவலப் செய்து விட்டார். அதனால், முழு கதையையும் ரெடி செய்து மீண்டும் சிம்புவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார். ஆனால் இன்னும் சிம்புவை இயக்குனரும், தயாரிப்பாளரும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
அதனால் மீண்டும் சிம்பு வேலையை காட்ட ஆரம்பித்து விட்டாரா என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், உண்மையில் சிம்பு துபாய்க்கு விடுமுறைக்கு சென்றுள்ளாராம். அது முடிந்த பிறகு தான் பட வேளைகளில் களமிறங்க உள்ளாராம் சிம்பு.