Connect with us

போட்ட பிளான் எல்லாம் பணால்!… சிம்புவுக்கு ஆப்பு வைத்த கொரோனா….

simbu

Cinema News

போட்ட பிளான் எல்லாம் பணால்!… சிம்புவுக்கு ஆப்பு வைத்த கொரோனா….

பல வருடங்களுக்கு பின் சிம்புவுக்கு ஹிட் கொடுத்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படம் நல்ல வசூலை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் வெற்றியை மாநாடு படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினர். இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் இப்படத்தால் லாபமடைந்த திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆனால், படத்தின் ஹீரோ சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை என சாக்கு சொல்லப்பட்டது. ஆனால், அது நம்பும் படியும் இல்லை. அதில் உண்மையும் இல்லை.

simbu

மாநாடு படம் .100 கோடி வசூலை நெருங்கியது. ஆனால், தனது வழக்கமான 9 எண் செண்டிமெண்ட் படி ரூ.108 கோடி வசூல் செய்ததாக அறிவித்தால் மட்டுமே நான் வெற்றி விழாவுக்கு வருவேன் என சிம்பு அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் அடம்பிடித்துள்ளார். ஆனால், சுரேஷ் காமாட்சி இதை ஏற்கவில்லை. முடியாது என மறுத்துவிட்டார். இதில் கோபமடைந்த சிம்பு அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார் எனக்கூறப்படுகிறது.

மேலும், மாநாடு படக்குழு Successful meet என நடத்தினால் சிம்பு அதற்கு போட்டியாக Thanks Giving meet நடத்த திட்டமிட்டார். அதாவது, மாநாடு வெற்றியை தனது ரசிகர்களுடன் கொண்டாட முடிவெடுத்தார். ஜனவரி 6ம் தேதி அந்த சந்திப்பு நிகழலாம் என செய்திகள் வெளியானது.

simbu

ஆனால், தற்போது கொரோனா மற்றும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், இதை நடத்த முடியாத நிலையில் சிம்பு இருக்கிறார்.

சரியான நேரத்தில் கொண்டாடப்படாத வெற்றி வீணாக போகும் என்பதற்கு இதுவே சாட்சி!..

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top