நடிகையுடன் லிவ்விங் டூ கெதர்... விரைவில் திருமணம்...சிம்பு பற்றிய பரபரப்பு அப்டேட்...
தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே முரட்டி சிங்கிளாக இருப்பவர் நடிகர் சிம்பு. நயன்தாரா, ஹன்சிகா என காதலித்து அதில் தோல்வி அடைந்தவர்.
பல வருடங்களாகவே அவருக்கு வீட்டில் பெண் தேடி வந்தனர். சிம்புவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. எனவே, பார்ப்பவர்கள் எல்லோரும் அவரிடம் கேட்கும் முக்கிய கேள்வி ‘உங்களுக்கு எப்போது திருமணம்?’ என்பதுதான்.
ஆனாலும், எதாவது பதிலை கூறி தட்டி கழித்து வந்த சிம்பு தற்போது ஒரு நடிகையிடம் மனதை பறிகொடுத்துள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. அவர் வேறு யாருமல்ல. ஈஸ்வரன் படத்தில் அவருடன் நடித்த நித்தி அகர்வால் என அடித்து சொல்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். ஜெயம் ரவி நடித்த பூமி படத்திலும் இவர் நடித்துள்ளார்.
தற்போது சிம்புவின் கால்ஷீட் மற்றும் நிதி சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் நித்தி அகர்வால்தான் பார்த்து கொள்கிறாராம். மேலும், சிம்புவின் வீட்டிலே அவர் தங்கியிருப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் செய்திகள் கசிந்துள்ளது.
சிம்புவோ அல்லது நித்தி அகர்வாலோ விரைவில் இதை உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.