கூல் சுரேஷின் சட்டையை கிழித்து காரை உடைத்த சிம்பு ரசிகர்கள்...கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க....

by சிவா |   ( Updated:2022-09-15 07:25:39  )
cool suresh
X

தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகராக வலம் வருபவர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர். மேலும், எந்த புதிய திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் அப்படத்தை பற்றி தனது கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்களிடம் பிரபலமானவர்.

cool suresh

அதுவும், வெந்து தணித்து காடு படத்திற்கு இவர் தனியாக ஒரு புரமோஷனே செய்தார். விருமன் படத்தை பார்த்த போது ‘வெந்து தணிந்தது காடு...விருமனுக்கு வணக்கத்த போடு’ என பேசுவார். மற்ற படம் என்றாலும் விருமனுக்கு பதில் அப்படத்தின் தலைப்பு அல்லது ஹீரோவின் பெயரை கூறுவார். இவரின் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக மாறியது.

suresh

இந்நிலையில், இவர் இன்று வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பார்க்க இன்று அதிகாலை 5 மணி காட்சிக்காக தியேட்டருக்கு சென்றார். அப்போது சிம்பு ரசிகர்கள் உற்சாக மிகுதியில் அவரை சூழ்ந்து கொண்டனர். மேலும், அவரின் காரின் மீது ஏறியும் நின்றனர். இதில், அவரின் கார் கண்ணாடி உடைந்தது.

cool suresh

அதேபோல், படம் முடிந்து அவர் வெளியே வரும் போது அவரை கட்டிப்பிடித்து சூழ்ந்து கொண்டனர். இதில், அவரின் சட்டை கிழிந்து போனது. அதன்பின் சிலர் அவரை பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

cool

இதுபற்றி கருத்து தெரிவித்த கூல்சுரேஷ் ‘சிம்பு ரசிகர்கள் என் மீது கொண்ட அன்புக்கு நன்றி. அதேநேரம்...என் கார் கண்ணாடி உடைந்துவிட்டது. கொஞ்சம் கட்டுப்பாட்டோடு இருங்கள். அதேநேரம், கண்ணாடி உடைந்தாலும், என் இதயம் உடையவில்லை’ என ஃபீலிங்காகி பேசியுள்ளார்.

Next Story