நீ ஒன்னும் நடிக்க வேண்டாம்- இயக்குனருடன் சண்டை போட்டு வெளியேறிய சிம்பு?

“ரௌத்திரம்”, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, “காஷ்மோரா” போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கியவர் கோகுல். இவர் விஜய் சேதுபதியை வைத்து “ஜுங்கா” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அத்திரைப்படம் சரியாக போகவில்லை. அதன் பின் “அன்பிற்கினியாள்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 48 ஆவது திரைப்படத்தை கோகுல் இயக்குவதாக இருந்ததாம். அந்த சமயத்தில் சிம்புவுக்கும் அவருக்கும் ஒரு சண்டை ஏற்பட்டதால் அந்த படம் டிராப் ஆகிவிட்டதாம். இருவருக்குள்ளும் அப்படி எதற்காக சண்டை வந்தது என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, தனது வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Gokul

Gokul

இயக்குனருக்கும் சிம்புவுக்கு நடந்த சண்டை

அதாவது “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் “கொரோனா குமார்” என்ற திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்ததாம். இத்திரைப்படம்தான் சிம்புவின் 48 ஆவது திரைப்படமாக அமைய இருந்ததாம். இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் கோகுல் தானே நடிப்பதாக கூறினாராம்.

அதற்கு சிம்பு, “அந்த கதாப்பாத்திரம் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரம். ஆதலால் அதில் எஸ்.ஜே.சூர்யா போன்ற நடிகர் நடித்தால்தான் நன்றாக இருக்கும்” என கூறியிருக்கிறார். இதனை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். தானே நடிப்பதாக அடம்பிடித்தாராம். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் சண்டையில் போய் முடிந்திருக்கிறது. இதனால் கடுப்பான சிம்பு அத்திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவலை மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கமல்ஹாசன் கைகளில் STR 48

அதனை தொடர்ந்துதான் சிம்பு, கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் தனது 48 ஆவது திரைப்படத்தை ஒப்படைத்தாராம். தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story