சிம்பு மட்டும் ஒழுங்கா ஷூட்டிங் வந்திருந்தா?... மன வேதனையை பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிம்பு திகழ்ந்து வந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் மீது பல புகார்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்றும் டப்பிங்கிற்கு கூட ஒழுங்காக வருவதில்லை எனவும் தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால் சிம்புவின் கேரியரே முடிந்தவிட்டது என பலரும் விமர்சித்தனர். எனினும் தனது உடலை மெருகேற்றி “மாநாடு” திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். தற்போது “பத்து தல” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த “சிலம்பாட்டம்” திரைப்படத்தின் தோல்வியை குறித்து அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.முரளிதரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
“சிம்பு இன்றைக்கு தருகிற ஒத்துழைப்பை அப்போது தந்திருந்தால், அத்திரைப்படத்தை திட்டமிட்ட நாட்களுக்குள் முடித்திருப்போம். அது அவருடைய நேரம், இதில் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. சமீபத்தில் கூட 15 நாள் நடிக்க வேண்டிய காட்சியை சிம்பு ஏழே நாட்களில் முடித்துவிட்டு வந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆனால் என்னுடைய படத்தில் 7 நாட்கள் படப்பிடிப்பை 15 நாட்கள் ஆக்கிவிட்டார். ஆனாலும் சிம்புவுக்கும் எங்களுக்கும் எந்த வித மனக்கசப்பும்” கிடையாது என்று கூறியுள்ளார்.
“சிலம்பாட்டம்” திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சனா கான், சினேகா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட் ஆனது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை.
இதையும் படிங்க: ஒளிப்பதிவாளருக்கு ஏழரை சனி…! படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பாக்யராஜ்… என்ன நடந்தது தெரியுமா?