Categories: latest cinema news

Arasan Movie: எப்போ சூட்டிங்? ‘அரசன்’ பட அப்டேட்டை கொடுத்து ஹைப் ஏத்திய சிம்பு

சிம்பு:

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக முரட்டு சிங்கிளாக இருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது மலேசியாவில் மாஸ் காட்டி வருகிறார். மலேசியாவில் நடந்த ஒரு கடை திறப்பு விழாவிற்கு சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் மிகவும் ஸ்டைலாக மாஸாக காட்சியளித்தார் சிம்பு. அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்தனர். ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து போனார் சிம்பு என்றுதான் சொல்லவேண்டும்.

சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அரசன் படத்தில் நடிக்க இருக்கிறார். அரசன் திரைப்படத்தை பற்றி பல வதந்திகள் பரவி வந்தன. இந்தப் படம் டிராப் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் வெற்றிமாறன் இந்தப் படத்தை எடுப்பதில் தீவிரமாக இருந்தார். படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆயினும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது.

அரசன் அப்டேட்:

ஒரு வழியாக சூட்டிங் எப்போது என சிம்புவே கூறியுள்ளார். மலேசியாவில் நடந்த விழாவிற்கு வந்த சிம்புவிடம் அரசன் படத்தின் அப்டேட்டை பற்றி கேட்டனர். அதற்கு சிம்பு வரும் 9 ஆம் தேதி அரசன் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது. படப்பிடிப்பு மதுரையில்தான் நடைபெற இருக்கிறது. அதனால் சூட்டிங்கிற்கு நான் இங்கிருந்தே நேரடியாக மதுரைக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதனால் அரசன் படம் மதுரையை பின்னணியாக வைத்து தயாராகப் போகும் படமாகத்தான் இருக்கப் போகிறது. எப்படி ஆடுகளம் படத்தில் தனுஷு மதுரை பாஷையை பேசி நடித்து வெற்றிவாகை சூடினாரோ அதே போல் சிம்புவும் மதுரை மொழியில் பேசுவார். மேலும் முதன் முறையாக வெற்றிமாறனுடன் சிம்பு இணைவதால் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தரமான படம்:

ஆனால் வெற்றிமாறனை பொறுத்தவரைக்கும் ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால் காலம் தாழ்த்துவாரே தவிற படத்தை தரமாக கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதனால் இந்த அரசன் திரைப்படம் சிம்புவுக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக இருக்கும்.

Published by
Rohini