சிம்பு தாய்லாந்து போனதின் ரகசியம் இதுதானா?? வெறித்தனமா இறங்கி ஆட தயாராகும் ATMAN…
தமிழ் சினிமாவின் கம்பேக் நாயகனாக திகழும் சிம்பு, சமீபத்தில் நடித்து வெளிவந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதில் சிம்புவின் யதார்த்த நடிப்பை பலரும் பாராட்டினர்.
இதனை தொடர்ந்து சிம்பு, தற்போது “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை ஓப்லி கிருஷ்ணா இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங் வேலைகள் மட்டு மிச்சம் இருக்கிறதாம்.
எனினும் இந்த வேளையில் சிம்பு தாய்லாந்துக்கு சென்றுள்ளாராம். அவர் தாய்லாந்து சென்றதற்கு பின்னணியாக ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது சிம்பு, மிஷ்கின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இத்திரைப்படத்திற்காக மார்சியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ளத்தான் சிம்பு தாய்லாந்து சென்றிருக்கிறாராம். அப்பயிற்சிகளை முடித்துவிட்டு வந்தவுடன் “பத்து தல” திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடப்போகிறாராம்.
இதையும் படிங்க: தயாராகிறது கலைஞர் மு.கருணாநிதியின் பயோபிக்… டைரக்டர் யார்ன்னு தெரிஞ்சா ஷாக் அகிடுவீங்க!!
மேலும் சிம்பு, சுதா கொங்கராவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்திருந்தது. இதனிடையேதான் மிஷ்கினுடனும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் மிஷ்கின், விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை தொடங்கவுள்ளாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாம். ஆதலால் விஜய் சேதுபதியின் படத்தை முதலில் முடித்துவிட்டு அதன் பிறகுதான் சிம்புவை மிஷ்கின் இயக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.