Categories: latest news

சின்ன வயசுலயே டீச்சர்கிட்ட இப்படி ஒரு கேள்வியா? தலைமுடியை வெட்ட சொன்னதுக்கு சிம்பு சொன்னது என்ன தெரியுமா

Actor Simbu: மாநாடு படத்திற்கு பிறகு ஒரு பெரிய கம்பேக் கொடுத்திருக்கும் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கமலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். ஏற்கனவே கமல் ப்ரடக்‌ஷனில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். இதற்கிடையில் மணிரத்னம் படம் ஆர்மபிக்கப்பட்டதால் இந்தப் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இணைகிறார்.

ஆரம்பத்தில் ஒரு ப்ளேபாயாகவே நடித்து ரசிகர்களின் அதிருப்தியை பெற்று வந்த சிம்பு சமீபகாலமாக ஆக்‌ஷன் படங்களில் நடித்து மீண்டும் மக்கள் நெஞ்சங்களை கவர்ந்தார். மாநாடு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததால் சிம்புவுக்கு இருக்கும் க்ரேஸ் உயர்ந்து கொண்டே போனது. அதுவும் உடல் எடையை குறைத்து ஒரு டீன் ஏஜ் பாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன பிரபல நடிகை!.. அட அவரு கமலையும் விட்டு வைக்கலயே!..

இந்த நிலையில் இயக்குனர் பி.வாசுவின் மகனும் நடிகருமான சக்திவாசுவும் சிம்புவும் ஒரே கால பள்ளி நண்பர்களாம். ஒரே பள்ளியில்தான் படித்தார்களாம். அதனால் சிறு வயதில் சிம்பு என்னெல்லாம் செய்தார் என்பதை சக்தி வாசு ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். சிம்பு சிறு வயதாக இருக்கும் போது அப்பவே அவரது தலைமுடி நீளமாக இருக்குமாம்.

அதுவும் அடர்த்தியாக நிறைய முடிகளுடன்தான் பள்ளிக்கு வருவாராம். குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்புவின் படங்களிலேயே பார்க்கும் போது நமக்கு தெரியும். அவர் படித்த பள்ளியில் ஒரு பி.டி. டீச்சர் இருந்தாராம். அவர் சிம்புவின் தலையை பார்த்து முதல் நாள் நாளை வரும் ஹேர் கட் செய்து வரவேண்டும் என கூறினாராம்.

இதையும் படிங்க: வாண்டடா போய் தனக்குத் தானே ஆப்பு வைத்துக்கொண்ட கமல்!.. கல்லா கட்டுமா இந்தியன் 2?…

ஆனால் சிம்பு பண்ணாமல் வந்திருக்கிறார். மறு நாளும் அந்த டீச்சர் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆனால் சிம்பு பண்ணவில்லை. மூன்றாவது நாளும் பார்த்தும் டீச்சர் கடுப்பாகி சத்தமாக சொல்லியிருக்கிறார். இதனால் காண்டான சிம்பு அந்த டீச்சரை பார்த்து ‘உன் முடியும் நீளமாத்தானே இருக்கு. நீயும் போய் கட் பண்ணிட்டு வா’ என கத்தி சொல்லியிருக்கிறார்.

இதை அருகில் இருந்து பார்த்த சக்தி வாசு மற்றும் இதர நண்பர்கள் சிரித்தார்களாம். அதுமட்டுமில்லாமல் சிம்புவை பார்க்கும் போதெல்லாம் இந்த ஒரு விஷயத்தை நினைவு படுத்தி பேசி சிரித்துக் கொள்வோம் என சக்தி வாசு கூறினார்.

இதையும் படிங்க: இது நடந்தாதான் நான் உள்ளயே வருவேன்!.. சிவாஜி ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபப்பட்ட ரஜினி!…

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

10 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

11 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

17 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago