Connect with us

Cinema News

செல்லாது செல்லாது.! எல்லா கோட்டையும் அழிச்சிடுங்க.! தயாரிப்பாளரை சூடேத்திய சிம்பு.!

சிம்பு மாநாடு படத்தின் பெரிய வெற்றிக்கு பின்னர் தனது அடுத்தடுத்த படஙக்ளை கவனமாக தேர்வு செய்து வருகிறார். வழக்கமாக எல்லாரும் செய்வது போல தான், அவரும் தனது ஒரு படம் சூப்பர் ஹிட் ஆனவுடன் தனது சம்பளத்தை கணிசமாக அல்ல ஒரேடியாக உயர்த்திவிட்டார் என்றே கூறலாம். ஆம் மாநாடு வெற்றி மீண்டும் சிம்புவை பழைய மார்க்கெட் நிலவரத்துக்கு கொண்டு வந்துவிட்டதே.

சிம்பு மாநாடு படம் வெளியாவதற்கு முன்னரே தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிப்பில் 3 படங்கள் நடிப்பதாக கூறப்பட்டது. அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அப்போது சிம்புக்கு பெரிய மார்க்கெட் இல்லை. ஆதலால், 3 படத்திற்கும் சேர்த்தே 25 கோடி தான் சம்பளமாக பேசப்பட்டதாம்.

 

வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங் நிறைவு பெற போகிறது. அதற்கடுத்து, பத்து தல பட ஷூட்டிங்கிற்கு பிறகு ஐசரி கணேசன் தயாரிப்பில் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்க இருந்தார்.

இதையும் படியுங்களேன் – உனக்கு 7 நாள் தான் டைம்.! கமல்ஹாசனுக்கே செக் வைத்த ஒரே இயக்குனர் இவர்தானாம்.!

இந்த நிலையில் தான் சிம்பு தரப்பில் இருந்து அந்த செய்தி வெளிவந்துள்ளது. மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனது மார்க்கெட் உயர்ந்துவிட்டதால் 3 படத்திற்கு 25 கோடி கட்டுபடியாகாது. ஆதலால், அடுத்த படமான கொரோனா குமாருக்கு மட்டும் 25 கோடி வேண்டும் என கூறியுள்ளாராம்.

இதனை கேட்டு அதிர்ந்து போன தயாரிப்பு தரப்பு திட்டவட்டமாக மருத்துள்ளதாம். ஆதலால், கொரோனா குமார் நடப்பது சந்தேகமே என புயலை கிளம்பிவிட்டனர் கோடம்பாக்கத்தினர். ஒன்று சிம்பு இறங்கி வர வேண்டும். இல்லை ஐசரி கணேசன் ஏறி வரவேண்டும் இல்லையென்றால் கொரோனா குமார் அந்தரத்தில் தொங்கதான் செய்யும் என்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top