கழட்டி விட்ட ரஜினி.. தட்டித் தூக்கிய கமல்..! சிம்புவுக்கு அடித்த ஜாக்பாட்..

simbu
சினிமாவை பொறுத்தவரைக்கும் வாய்ப்புகள் வரவரைக்கும் தான் ஒருவரின் வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படுகிறது. வாய்ப்புகள் வருவதும் போவதும் அவரவர் அதிர்ஷ்டத்தை பொருத்து தான். அந்த வகையில் ரஜினியின் அடுத்தப் படம் தேசிங்கு பெரியசாமி தான் இயக்கப் போகிறார் என்று அனைவரும் ஆர்வமாக காத்து கொண்டிருந்தனர்.
ஆனால் ரஜினி தேசிங்கு பெரியசாமியை கழட்டிவிட்டு டான் பட இயக்குனரான சிபி சக்கரவர்த்தியுடன் கை கோர்ப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனாலும் அந்த வாய்ப்பும் எட்டாமல் போனது .இப்போது ஜெய்லர் படத்தை முடித்துவிட்டு அவரது மகள் இயக்கத்தில் லால்சலாம் படத்தில் இணைகிறார். அதனை அடுத்து ஜெய்பீம் இயக்குனரிடம் கைகோர்க்கிறார் ரஜினி.

rajini desingu periyasamy
இந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த தேசிங்கு பெரியசாமிக்கு இது ஒரு ஏமாற்றமாக இருந்தாலும் கமல் தனது ராஜ்கமல் புரடக்ஷன் மூலமாக தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். அதுவும் சிம்புவை
வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் சிம்புவின் கெரியரிலேயே இது ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் சிம்பு தனது சம்பள விஷயத்தில் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறாராம். அதாவது இனிவரும் படங்களுக்கு 40 கோடி கேட்டுவந்த சிம்பு இந்தப் படத்திற்காக தனது சம்பளத்தை குறைத்திருக்கிறாராம்.

simbu kamal
மேலும் ராஜ்கமல் நிர்வாகி ஒருவர் மகேந்திரன் சிம்புவை மாஸ் ஹீரோவாக மாற்றும் முயற்சியில் இருக்கிறாராம். ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு உடல் நிலை சரியில்லாத போது சிம்பு தான் தொகுத்து வழங்கிவந்தார். ஆனால் அவருக்கு முன்பு பல நடிகர்களை அணுக அவர்கள் முடியாது என மறுத்துவிட்டனாராம். சிம்பு தான் முன்வந்து செய்து கொடுத்தாராம். அதற்காக சிம்புவின் வளர்ச்சிக்கு ராஜ்கமல் ஒரு பெரும் துணையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.