ஒருவழியா டாக்டர் பட்டத்தையும் வாங்கியாச்சி.! டாக்டர் சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!
மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து சிம்புல் அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார்.
இசைப்புயல் ஏ.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். அவரது இசையில் அண்மையில் அப்படத்திலிருந்து மறக்குமா நெஞ்சம் எனும் பாடல் டீசரோடு கிளசம்பஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.
நடிகர் சிம்பு கிட்டத்தட்ட 40 வருடங்களாக (குழந்தை நட்சத்திரமாக தொடங்கி ) சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். அவரது கலைப்பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பட்டத்தை வேல்ஸ் கல்வி குழுமம் வழங்கியுள்ளது. இந்த வேல்ஸ் குழுமத்தின் முக்கிய நிர்வாகிதான் வெந்து தணிந்தது காடு பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கௌரவ டாக்டர் பட்டம் சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அந்த பட்டத்தை சிம்புவுக்கு நிறுவனம் வழங்கியுள்ளது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கான சம்பளமே இந்த டாக்டர் பட்டம் தான் போல என கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றனர்.