திறமை இருந்தும் பயன்படுத்தாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிம்பு!.. அவருக்கு உள்ள இடம் இது இல்ல.. பிரபல இயக்குனர் ஒபன் டாக்!..

simbu
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல், அஜித்-விஜய் இவர்களுக்கு பிறகு இந்த வரிசையில் பேசக்கூடிய நடிகர்களாக இருந்தவர்கள் தனுஷ்-சிம்பு. சிம்பு குழந்தையில் இருந்தே கேமிரா முன்பு நின்றவர் என்றாலும் நாயகனாக அந்த அளவுக்கு ஜொலிக்காமல் இருந்தார்.

simbu
அதன் பின் அவருக்கு இணையாக தனுஷ் நடிக்க வந்து ஒரு காலகட்டத்தில் மிகவும் பெரிதாக பேசப்பட்டார். திறமை இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாதவர் தான் சிம்பு என்று இயக்குனர் சுசீந்திரன் கூறினார். மேலும் அந்த திறமையை சரியாக பயன்படுத்தினால் ஒட்டுமொத்த சினிமாவுமே ஆச்சரியப்படுகிற அளவுக்கு அவரது வளர்ச்சி இருக்கும், ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற வகையில் இன்னும் அவருக்கு கதைகள் கிடைக்கவில்லை என்றும் சுசீந்திரன் கூறினார்.
இதையும் படிங்க : நடிகர்னாலே இவர்கள் தான் !.. வேற யாரையும் சொல்லமாட்டேன்!.. ஆவேசமாக பேசிய சிவகுமார்…
மேலும் அவர் கூறும்போது தனுஷ் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஹாலிவுட் வரைக்கும் சென்று விட்டார், அவருக்கு நல்ல நல்ல கதைகள் வருகிறது என்று கூறினார். இந்த கூற்று உண்மை என நிரூபீக்க சிம்புவின் சமீபகால படங்கள் சான்றாக இருக்கும். மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து என்னாலயும் முடியும் என்று நிரூபித்துக் காட்டினார். வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் மிகவும் மெனக்கிட்டு நானும் ஒரு நடிகன் என நின்றார்.

simbu dhanush
அடுத்ததாக பத்து தல படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சுசீந்திரன் சிம்புவை வைத்து ரொம்ப நாள்களாகவே சிம்புவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அது ஈஸ்வரன் படத்தின் மூலம் நிறைவேறியது. அதுவும் சிம்பு சுசீந்திரனிடம் ஏதாவது கதை இருந்தால் சொல்ல சொன்னாராம்.
அதுவும் பத்து தல படத்திற்கு சூட்டிங் போய்விடுவேன். அதற்குள் இந்த இடைப்பட்ட காலத்தில் எடுக்கக் கூடிய படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியிருக்கிறார். உடனே சுசீந்திரன் ஈஸ்வரன் படத்தின் கதை மற்றும் ஆலோசனைகள் எல்லாவற்றையும் வீடியோகால் மூலமே விவரித்திருக்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் தான் சிம்புவை பார்த்திருக்கிறார். வெறும் 27 நாள்களில் எடுக்கப்பட்ட படமாம் ஈஸ்வரன் திரைப்படம். ஆனால் படம் எந்த அளவுக்கு தோல்வி என்று அனைவருக்கும் தெரிந்ததே.

simbu suseenthiran