’பத்து தல ‘ சிம்பு படமா? கௌதம் கார்த்திக் படமா? சந்தேகத்தை கிளப்பிய பிரபல நடிகர்கள்....!
ஞானவேல் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் பத்து தல. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சிம்புக்கு டஃப் கொடுக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார். சிம்பு ஏற்கெனவே வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்து பட ரிலீஸ்-க்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
பத்து தல படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் கன்னடம் படமான மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும். நடிகர் சிவராஜ் குமார் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார். மேலும் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை வைத்து தான கன்னடம் படத்தின் மொத்த கதையும் நகருமாம்.
இதையும் படிங்கள் : மணிரத்னம் வேண்டாம்…. வெற்றிமாறனுக்கு ஓகே.! அஜித் பட இயக்குனரின் அட்டகாசமான முடிவு.!
ஆனால் தமிழில் சிம்பு நடிப்பதால் பத்து தல படத்தில் சிம்புவுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என பேசப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் முடிக்கப்பட்ட காட்சிகள் வரை பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோர் பார்த்திருக்கிறார்கள். ஞானவேல் ராஜா இந்த காட்சிகளை அவர்களுக்கு போட்டு காட்டியுள்ளார்.
இதையும் படிங்கள் : இதுவரைக்கும் எந்த தமிழ் பாட்டுலயும் இந்த விஷயம் கிடையாது… நம்ம கேப்டன் அப்போவே மாஸ் காட்டிட்டார்…
படத்தை பார்த்த இருவரும் கௌதம் கார்த்திக்கை மிகவும் புகழ்ந்துள்ளனராம். அந்த அளவுக்கு பிரமாதமாக நடித்திருக்கிறாராம். இந்த படத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக்கு பெரிய எதிர்காலமே இருக்கிறது என கூறியுள்ளனராம். இதனால் இன்னும் தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கடின உழைப்பு போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம் நடிகர் சிம்பு. இந்த செய்தியை வலைப்பேச்சு அந்தனன் சமீபத்தில் அளித்த
பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.