பிக்பாஸில் கமலுக்கு பதில் சிம்பு… இதுக்கு அவர் செட் ஆவாரா?….

0
710
kamal

பிக்பாஸ் தமிழ் 5 சீசன் முடிந்துள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்தி வந்த நிலையில், தற்போது விக்ரம் படத்தில் நடிப்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல் அறிவித்தார்.

எனவே, அவருக்கு பின் யார் இந்நிகழ்ச்சியை நடத்தப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எழுந்தது. ஏற்கனவே, கமல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு நாள் மட்டும் அந்நிகழ்ச்சியை நடத்தினார். எனவே, அவரே இந்நிகழ்ச்சியை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: குட்டை டிரௌசர் சர்ட்டில் பாக்யராஜின் மருமகள்..! பாலிவுட் ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டிய கிகி..

simbu

ஆனால், திடீரென நடிகர் சிம்பு இந்நிகழ்ச்சியை நடத்துகிறார் என செய்திகள் வெளியானது. தற்போது அது உறுதியான செய்தியாகவும் மாறியுள்ளது. கமல் இருந்த இடத்தில் சிம்புவை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஏனெனில், சிம்பு அடிக்கடி உணர்ச்சிவசப்படும் நபர் ஆவார். கமலை போன்ற பக்குவமோ, அனுபவ முதிர்ச்சியோ அவருக்கு இல்லை. எனவே, அவர் எப்படி இதற்கு செட் ஆவார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதை பார்த்தால்தான் இது தெரியவரும்.

google news