சிம்புவிற்கு ‘சின்னவீடு’ தான் சரியா இருக்கும்...! அரங்கத்தை அதிரவைத்த பிரபலம்...!
தமிழ் சினிமாவில் ரீஎன்ரி கொடுத்து மாஸாக கெத்து காட்டிக் கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக பல படங்களை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி நடிப்பிற்கு ஒரு நீண்ட இடைவெளி கொடுத்தார்.
ஆரம்பகாலங்களில் மிகவும் காதல், ரொமான்ஸ் போன்ற படங்களை கொடுத்தவர் தற்போது ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மாநாடு படத்திற்கு பிறகு அவரின் மார்க்கெட்டே எகிறி விட்டது. கைவசம் தொடர்ந்து பல படங்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பாக்யராஜ் சினிமாவில் வந்து 50 வருடங்கள் நிறைவடைவதை ஒட்டி அவரிடம் சில கேள்விகளை பேட்டியின் போது கேட்டனர். அப்போது அவர் நடித்த படங்களை வரிசை படுத்தி இந்த படங்களில் இப்பொழுதுள்ள ஹீரோக்கள் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என புகைப்படங்களை கொடுத்தனர்.
அப்போது பாக்யராஜின் பிரபலமான படங்களில் ஒன்றான ‘சின்னவீடு’ படம் சிம்புவிற்கு தான் பொருத்தமாக இருக்கும் என சிம்புவின் புகைப்படத்தை காட்ட அரங்கமே சிரிப்பு ஒலியால் அதிர்ந்து விட்டது. உடனே அவர் நீங்கள் சிரிப்பதை பார்த்தால் நான் ஏதோ தப்பாக கூறியது போல் வந்து விடும். அந்த கதாபாத்திரம் அப்படி இருக்கும். அந்த வகையில் சிம்புதான் சரியாக இருக்கும் என கூறினேன் என்று தெரிவித்தார்.