நடிகையுடன் கைகூடி வந்த திருமணம்! தன் வாயால கெட்ட சிம்பு - என்ன சரவணா இது?

simbu
எங்க போனாலும் பிரச்சனை எத தொட்டாலும் பிரச்சனை இப்படி பிரச்சனைக்கு பேர் போன ஆளாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் சிம்பு. போற இடமெல்லாம் முட்டி முட்டி மோதுகிற இடமாகவே சிம்புவிற்கு இருந்தது. ஏதோ கடவுள் புண்ணியம் இருக்கிறதால்தான் என்னவோ திரும்பவும் ஒரு கம்பேக் கொடுத்தது ரசிகர்களை உற்சாகப் படுத்தினார் சிம்பு.
தீனி போட்ட படங்கள்
ஆரம்பத்தில் ஒரு பிளே பாயாகவே வளம் வந்தார். அவருடைய படங்களும் அடல்ட் படங்களாகவே அமைந்ததனால் சிம்பு மீது குடும்ப ரசிகர்களுக்கு ஒரு வித அதிருப்தியே இருந்து வந்தது. குடும்பங்களோடு சேர்ந்து பார்க்கும் படமாக சிம்புவின் படம் அமையாததால் ஒரு சில பேர் அவரை வெறுக்கவும் செய்தனர். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த மாநாடு, வெந்து தனிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் சிம்புவின் நடிப்பிற்கு தீனி போட்ட படங்களாகவே அமைந்தன.

simbu1
இதையும் படிங்க : என்னத்த பானையை உருட்டினாலும் ஷேப்புக்கு வரமாட்டுங்குது! ஓரங்கட்டப்படுவாரா VP? தளபதி 68ல் என்னதான் பிரச்சினை?
அடுத்ததாக கமல் புரொடக்ஷனில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு. எந்த நிலையில் அவரைப் பற்றிய ஒரு சீக்ரட்டை திரை விமர்சகர் வித்தகன் சேகர் ஒரு பேட்டியில் கூறினார். அதாவது பல முன்னணி நடிகைகளுடன் தொடர்புபடுத்தி பேசிய சிம்பு நடிகை நயன்தாராவுடன் இருந்த காதலை மட்டும் தான் வெளிப்படுத்தி இருந்தார்.
பல நடிகைகளுடன் கிசுகிசு
இருந்தாலும் ஹன்சிகா, திரிஷா போன்ற பல நடிகைகளுடன் சிம்புவிற்கு காதல் ஏற்பட்டது என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டே வந்தன. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சின்ன குஷ்புவாக திடீரென உள்ளே நுழைந்தார் ஒரு நடிகை. பல வெற்றி படங்களில் நடித்து வந்த அவர் சிம்புவுடன் காதல் வயப்பட்டார்.
இதையும் படிங்க : நோ பார்ட்டி! நோ ப்யூட்டி – தனுஷின் திடீர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?
இவர்கள் காதலுக்கு சிம்புவின் தந்தை டி ராஜேந்திரனும் பச்சைக்கொடி காட்ட திருமணம் வரைக்கும் சென்றதாம். ஆனால் அந்தத் திருமணம் திடீரென நின்று விட்டதாம். அதற்குக் காரணம் சிம்பு தான் என வித்தகன் சேகர் கூறினார். அதாவது அந்த நடிகையிடம் சிம்பு திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என ஒரு கண்டிஷனை போட்டாராம்.

simbu2
இதில் அந்த நடிகைக்கு விருப்ப ம் இல்லை ஆதலால் இனிமேல் இது செட் ஆகாது என சிம்புவை விட்டு பிரிந்து சென்றாராம். மேலும் கடந்த ஆண்டு தான் அந்த நடிகைக்கு திருமணம் நடந்தது. தன்னுடைய திருமணத்தை பிரபல ஓடிடியில் வெளியிட்டு பேசிய அந்த நடிகையிடம் சிம்புவை பற்றி கேட்டார்கள். அதற்கு அந்த நடிகை சிம்பு உடனான காதலை மறக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும் அந்த நேரத்தில் தான் தற்போது என் கணவராக இருக்கும் இவர் காதலை வெளிப்படுத்தி இருந்தார் என்றும் அந்த காதலை ஏற்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : என்னடா கேமியோ? அஜித் படத்தில் அப்பவே கலக்கிய கமல் – தூசி தட்டி எடுத்தாச்சுல