சிவகார்த்திகேயனை உதறி தள்ளிய இளம் இயக்குனர்.! முழு காரணம் சிம்பு மட்டும் தான்.!

by Manikandan |
சிவகார்த்திகேயனை உதறி தள்ளிய இளம் இயக்குனர்.! முழு காரணம் சிம்பு மட்டும் தான்.!
X

தற்போதுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு நடிகரை புக் செய்து மொத்தமாக மூன்று படங்கள் சேர்த்து ஒப்பந்தம் செய்து விடுகின்றனர். இந்த வழக்கத்தை கலைப்புலி எஸ் தாணு முதலில் தான் தொடங்கிவைத்தார். அதன்படி, மற்ற தயாரிப்பாளர்களும் பின்தொடர்ந்து வருகின்றனர் என பேசப்படுகிறது.

விசுவாசம் திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து மூன்று படங்களை தயாரிக்க உள்ளது அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என சினிமா வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டு வருகிறது.

sivakarthikeyan

அதில் முதல் படத்தை ராஜஸ்தான் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்க உள்ளாராம். அதற்கு அடுத்த படத்தை இயக்க ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவரிடம் பேசப்பட்டது என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்...வலிமை திரைப்படத்தின் முதல் விமர்சனம்.!? முதல் பாதி இரண்டாம் பாதி.!

ஆனால், அஷ்வந்த் மாரிமுத்து ஏற்கனவே சிம்பு படம் கதை கூறி ஓகே வாங்கி வைத்துள்ளாராம். ஆதலால் சிம்பு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தை இயக்குவார் என கூறப்படுகிறதே அதனால் சிவகார்த்திகேயனுக்கு நோ சொல்லிவிட்டார் என தெரிய வருகிறது.

Next Story