மாநாடு ரிலீஸ் ஆகாம போனதுக்கு சிம்புதான் காரணம்.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்....

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. சிம்பு ரசிகர்களும் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏனெனில், ரஜினி நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாவதால் மாநாடு படம் அப்படத்தோடு போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்டது.

Maanaadu trailer
ஆனால், திடீரென இப்படம் தீபாவளி ரேஸிலிருந்து விலகியது. மேலும், நவம்பர் 25ம் தேதி இப்படம் வெளியாகும் என சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ரஜினியின் அண்ணாத்த படம் வருவதால் அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை எனவும், சிம்புவின் தீராத பஞ்சாயத்தான மைக்கேல் ராயப்பன் பிரச்சனை காரணமாக மாநாடு படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என பல காரணங்கள் கூறப்பட்டது.
ஆனால், அதில் உண்மை இல்லையாம். சிம்பு இன்னும் டப்பிங் பேசி முடிக்கவில்லை அதனால்தான் ரிலீஸ் தள்ளிப்போனது என பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சமீபத்தில்தான் அப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா தனது டப்பிங் பணியை முடித்துள்ளார். எனவே, இதை வைத்து பார்க்கும் போது கே.ராஜன் கூறியது உண்மைதான் என நம்பப்படுகிறது.