தமிழ் சினிமாவில் உள்ள முன்னனி நடிகர்களில் சிம்புவும் ஒருவர். அதேநேரம் இவர் மற்ற நடிகர்களை போல தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதில்லை.. ஒரு படத்துக்கும் அடுத்த படத்திற்கும் இடையே அதிக இடைவெளி விடுகிறார். இவரின் பத்து தல படம் ரிலீஸாகி
இரண்டு வருடங்கள் கழித்துதான் தக் லைப் படம் ரிலீஸானது. அந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. தக் லைப் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் சிம்புவின் அடுத்த படம் வெளியாகவில்லை..
தக் லைப் படத்திற்கு பின் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது டிராப் ஆனது. அதன்பின் வெற்றிமாறனின் அரசன் படத்தில் சிம்பு நடிக்க தொடங்கினார். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது..
இந்நிலையில்தான், கடந்த 3ம் தேதி சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடினார். சிம்புவின் அடுத்த திரைப்படத்தை டிராகன் படத்தை இயக்கிய அசோக் மாரிமுத்து இயக்கவுள்ளார். எனவே 3ம் தேதி தனது ரசிகர்களை சந்திப்பதோடு அந்த விழாவில் தனது புதிய படத்தையும் அறிவிக்க சிம்பு திட்டமிட்டிருந்தாராம். ஆனால் ரஜினி படத்தை இயக்குவதற்காக முயற்சி செய்து இரண்டு மாதங்களை அஸ்வத் மாரிமுத்து வீணடித்துவிட்டதால் கோபமடைந்த சிம்பு இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை என சொல்கிறார்கள்..
ஒருபக்கம் அஸ்வத் தொடர்பு கொண்ட சிம்பு ‘ஏப்ரல் மாதம் ஷூட்டிங் போய் ஆகணும்.. ரெடியா இரு’ தினமும் சொல்லியிருக்கிறாராம்.












