எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல ...! ஜெயம் ரவியிடம் வருத்தம் தெரிவித்த சிம்பு...!

by Rohini |
simbu_main_cine
X

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பத்து தல என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

simbu1_cine

கமலின் ராஜ்கமல் புரெடக்‌ஷனிலும் அடுத்ததாக படம் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாயின. ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பதான் நல்ல ஒரு ஃபார்மில் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையில் மணிரத்னம் இயக்கத்தில் வருகிற 30 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இதையும் படிங்கள் : ரியல் லைஃபிலும் விஜயகாந்த் ஹீரோதான்… பூந்தோட்ட காவல்காரன் உருவான பின்னணி!

simbu2_cine

இந்த படத்தில் நடிகர்கள் புடை சூழ ஒரு பட்டாளமே நடிக்கும் பெரிய காவியமாக வெளியாக உள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் வந்தியத்தேவன். இந்த கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வனில் நடித்திருப்பவர் நடிகர் கார்த்தி. இந்த கதாபாத்திரத்தில் ஏற்கெனவே நடிகர் சிம்பு நடிக்க இருந்ததாகவும் அதை ஜெயம் ரவி மற்றும் விக்ரம் மறுத்ததாகவும் சிம்பு நடித்தால் நாங்கள் நடிக்க வரமாட்டோம் என கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

simbu3_cine

இதை பற்றி நேற்று நடந்த புரமோஷனில் நடிகர் ஜெயம் ரவியிடம் கேட்டபோது ஏங்க, முதல்ல நாங்க சொன்னா மணி சார் கேட்குற ஆளா? அதுவும் போக எங்களுக்கும் சிம்புவுக்கும் எந்த பிரச்சினையும் இல்ல. மேலும் இந்த செய்தி பத்திரிக்கையில் வெளிவந்ததும் சிம்பு எனக்கு போன் செய்து ”மச்சி, இந்த செய்திக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல மச்சி, தேவையில்லாத வேலை பாக்குறாங்க, நீ எதும் நினைக்காத என்று சிம்பு கூறியதாக “ ஜெயம் ரவி தெரிவித்தார்.

Next Story