கமல் - சிம்பு கூட்டணியில் தொடர்ந்து இழுபறி! உண்மையிலேயே யாரால பிரச்சினை தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு ஒரு முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார். அவருடைய மார்க்கெட் அவ்வளவுதான் என்று எண்ணி இருந்த ரசிகர்களுக்கு ஒரு சரியான கம் பேக் கொடுத்து திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்ற ரஜினியின் பஞ்ச் டயலாக்கை போல சும்மா கெத்தா வந்து நின்னார் சிம்பு.
சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பத்து தல அந்தப் படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்ற போதில் அடுத்ததாக ராஜ்கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது. ஆனால் அந்தப் படத்திற்கு இப்போது ஒரு புதிய சிக்கல் எழும்பி உள்ளது.
அதாவது மாநாடு படம் தொடங்கிய பொழுதே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆன ஐசரி கணேஷ் தொடர்ந்து மூன்று படங்களில் என்னுடைய தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்று சிம்புவிடம் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு சிம்பு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு படத்திற்கு 10 கோடி வீதம் 30 கோடி என பேசப்பட்டு அட்வான்ஸ் தொகையாக 16 கோடி சிம்புவிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் மாநாடு படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடித்த சிம்பு அடுத்ததாக வேறொரு தயாரிப்பில் 10 தல படத்தில் இணைந்தார். அதனை அடுத்தும் இப்போது ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிப்பில் புதிய படத்தில் இணைந்திருப்பதால் இது ஐசரி கணேசிற்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி ஐசரி கணேஷ் தரப்பில் "கமல் புரொடக்ஷனில் நடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை என்றும் என்னுடைய தயாரிப்பில் நடித்து முடித்தவுடன் அடுத்த புரொடக்ஷனில் நடிப்பதே சிறந்தது எனவும்" கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதையெல்லாம் தாண்டி சிம்புவிற்கு என்ன பிரச்சனை என்றால் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தான் சிம்பு நடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு வருகிறதாம்.
ஆனால் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கம் என்றால் சிம்பு தீண்டவே வேண்டாம் என்று மருத்து வருகிறாராம் ஏனெனில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவிற்கும் கௌதம் வாசுதேவிற்கும் சில பல முரண்பாடுகள் இருந்து கொண்டே வந்திருக்கின்றன. அதன் காரணமாகவே சிம்பு மறுத்து வருகிறாராம். ஆனால் ஐசரி கணேஷ் சிம்புவிற்கு கொடுத்த அட்வான்ஸ் போலவே கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் அட்வான்ஸ் தொகையை கொடுத்திருக்கிறாராம். அதனாலேயே அவருடைய இயக்கத்தில் தான் சிம்பு நடிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கூறுகிறார். இப்படி இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருப்பதால் சிம்பு கமல் கூட்டணி ஆரம்பிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.