அந்த மாதிரி ஒரு வீடீயோவை காட்டி சிம்புவையே கவுத்திடீங்களே.! விஷயமே இதுல வேற.!
நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் பழைய உற்சாகத்துடன் சினிமா துறையில் செயல்பட்டு வருகிறார். அதற்கடுத்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். இதில் சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
அதற்கு முன்னரே பத்து தல எனும் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப்படத்தில் சிம்புவுக்கு ரவுடி கதாபாத்திரம் என்பதால் தாடி மீசை வேண்டும் என்பதால் படத்தின் சூட்டிங் தாமதமாகி வந்தது.
இதனிடையே சிம்புவை மீண்டும் பத்து தல ஷூட்டிங்கிற்கு வரவழைக்க படக்குழு இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை மாநாடு எடிட்டர் பிரவீன்.கே.எல் மூலம் எடிட் செய்து அதனை வீடியோவாக தயார் செய்து சிம்புவிடம் காட்டியுள்ளனர்.
இதையும் படியுங்களேன் - இதுனால தான் வலிமை வசூல் பத்தி அள்ளி விட்ராங்கலா.?! இதுல விஜய் பெயரும் அடிபடுதே.!?
அந்த வீடியோவை பார்த்த சிம்பு மெய்சிலிர்ந்து விட்டாராம். படம் உண்மையில் அருமையாக வந்துள்ளது. அதனால் நான் மீண்டும் சூட்டிங்கிற்கு வருகிறேன் என்று தற்போது தாடி, மீசைவளர்க்க தொடங்கியுள்ளாராம்.
அது முழுதாக வளர்ந்த பிறகு ஏப்ரல் மாதம் பத்து தல படத்தின் சூட்டிங்கிற்கு சிம்பு கிளம்புவார் எனக் கூறப்படுகிறது. அந்த பட சூட்டிங் முடிந்த பிறகு வெந்து தணிந்தது காடு கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க உள்ளாராம் சிம்பு.