சிம்புவின் மார்க்கெட்டை காலி செய்ய களமிறங்கும் நடிகை.! ஒரு வேளை பழைய பகையோ.?!
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் இறுதி காட்சி மட்டும் இன்னும் படமாக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த மாநாடு திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே மகா எனும் திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து முடித்திருந்தார் சிம்பு. அது நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படம் ஆகும்.
அந்த சமயத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது. அப்போதுதான் ஹன்சிகா சிம்புவிடம் இந்த கதாபாத்திரத்தை பற்றி கூறி நடிக்க கேட்டிருந்தார். அதற்கு சிம்புவும் சம்மதம் தெரிவித்து நடித்து முடித்தார்.
தற்போது சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டனர். இந்த நேரத்தில் மஹா திரைப்படம் வெளியாவது, சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் அவருக்கு வந்த மார்க்கெட்டை இந்த படம் சரித்துவிடும் என கூறப்படுகிறது. மாநாடு திரைப்படத்திற்கு முன்பே ரிலீசாக வேண்டிய திரைப்படம் காலதாமதமாகி தற்போதுதான் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்களேன் -பீஸ்ட் விஜயை வச்சி செய்து வரும் கமல் ரசிகர்கள்.! ஒரு போட்டோ வந்தது குத்தமாபா.?!
சிம்புவும் ஹன்சிகாவும் பிரிந்து விட்டனர் இந்த நேரத்தில் சிம்புவின் மார்க்கெட்டை இறங்கு முகமாக்கவே ஹன்சிகாவின் மஹா திரைப்படம் வெளியாக உள்ளதா அல்லது மாநாடு திரைப்படத்தின் வெற்றியை வைத்து இப்படத்தின் வியாபாரம் பேசப்பட்டு அதற்காக வெளியாக உள்ளதா என்பது படம் வெளியானால் தான் தெரியவரும்.