பெரிய ஹீரோக்கள் இவர்கிட்ட கத்துக்கணும்! – ரசிகர்களுக்கு சோறு போட்டு விருந்து வைத்த சிம்பு!..
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ள கதாநாயகனாக நடிகர் சிம்பு இருந்து வருகிறார். அவர் நடித்து வெளியாகவிருக்கும் பத்து தல படத்தை பற்றிய பேச்சுக்கள் மக்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளன.
ஒரு சமயத்தில் சிம்பு தமிழ் சினிமாவில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானார். படப்பிடிப்புகளுக்கு சரியாக வர மாட்டார் என பலரும் அவரை விமர்சித்ததுண்டு. அதன் பிறகு உடல் எடையும் அவருக்கு அதிகரித்தது. பிறகு வெளிவந்த மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு முக்கியமான படமாக அமைந்தது. அதை தொடர்ந்து அடுத்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றது.
ரசிகர்களுக்காக நடந்த விழா:
பத்து தல திரைப்படமும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக திரைப்படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடக்கும்போது அதில் ரசிகர்களை குறைவாகவே அனுமதிப்பார்கள். ஆனால் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முக்கால்வாசி ரசிகர்களையே அனுமதித்திருந்தனர்.
அந்த இசை வெளியீட்டு விழா கிட்டத்தட்ட ரசிகர்களை சந்திப்பதற்கான ஒரு சந்திப்பு போல நடந்தது. இதற்கு நடுவே பெரிய கதாநாயகர்கள் கூட தங்கள் ரசிகர்களுக்கு செய்யாத விஷயத்தை சிம்பு இந்த இசை வெளியீட்டு விழாவில் செய்துள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து ரசிகர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர் பத்து தல குழுமத்தினர். சிம்பு தனது ரசிகர்களுக்கு இந்த அளவிற்கு மதிப்பு அளித்துள்ளாரே! என தமிழ் சினிமாவில் பலரும் இந்த செயல் குறித்து வியப்படைந்துள்ளனர். இதுக்குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறும்போது முழுக்க முழுக்க இது சிம்புவின் யோசனை என கூறியுள்ளார்.