More
Categories: Cinema News latest news

எந்த பிரச்சினையும் இல்லாம வெளிவந்த ஒரே படம்! அதற்கு காரணமானவரை நிற்கதியில் விட்ட சிம்பு

கோலிவுட்டில் ஒரு சரியான கம்பேக் கொடுத்து தனது வெற்றியை பதிவு செய்தார் நடிகர் சிம்பு. ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் அதே பொலிவுடன் மக்களை ரசிக்க வைத்த சிம்புவுக்கு திடீரென சறுக்கல் ஏற்பட்டது. மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் ஏகப்பட்ட குஷியோடு நம் தலைவன் திரும்ப வந்துட்டான் என்ற சந்தோஷத்தில் திகைத்தனர்.

ஆனால் வெந்து தணிந்தது  காடு படம் ஓரளவு வெற்றியை கொடுத்தாலும் வசூலில் கணிசமான வெற்றியை பதிவு செய்திருந்தது. அதன் பிறகு பத்து தல படம் அந்த அளவுக்கு பூர்த்தி செய்யவில்லை. அதன்பிறகு கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் இணைந்தார் சிம்பு.

Advertising
Advertising

simbu1

ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் சிம்பு என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் சிம்புவுடன் ஏற்கெனவே கையெழுத்தில்லா ஒப்பந்தத்தை போட்டிருந்தார். அதாவது அந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு தங்களது நிறுவனத்திற்கு மூன்று படங்களில் நடித்து கொடுப்பதாக வாக்களித்திருந்தாராம்.

ஆனால் இப்போது திடீரென கமல் புரடக்‌ஷனில் இணைந்திருப்பது ஐசரி கணேசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆகையால் கமலுடன் இணைவதில் சிக்கல் இழுத்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு தகவலை கூறினார். வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து சிம்புவின் அப்பாவும் அம்மாவும் நேராக ஐசரி கணேசனின் வீட்டிற்கே சென்று சிம்புவின் ஒரு படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்தது என்றால் அது வெந்து தணிந்தது காடு படம் மட்டும்தான் என்றும் அதற்கு நீங்கள் தான் காரணம் என்றும் கூறி நன்றியை தெரிவித்தார்களாம்.

simbu2

மேலும் டி.ராஜேந்திரனுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவரை அமெரிக்கா கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருந்ததும் ஐசரி கணேசன் தானாம். இப்படி உதவியவரை இந்த அளவுக்கு சிம்பு மனதை நோகடிக்கலாமா என்று திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க : காசு, பணம் எதுவும் வேணாம்… தமன்னாவின் தங்கமான மனசு – காதலனின் சொத்து இவ்வளவு தானா?

Published by
Rohini

Recent Posts