மீண்டும் வண்டி பழைய ஸ்டேஷன்ல தான் நிக்கும் போல!.. கோடிகளை நம்பி வாய்ப்புகளை தவறவிடும் சிம்பு!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரர் தற்போது பத்து தல படத்திற்காக படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கான சூட்டிங் தாய்லாந்தில் நடப்பதால் நீண்ட நாள்களாக சிம்பு அங்கு தான் இருந்து வருகிறார்.
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பிவின் அசாத்திய திறமை மெல்ல மெல்ல இப்பொழுது தான் தெரிகிறது. சொல்லப்போனால் தெரியப்படுத்தி வருகிறார். நடிப்பில் ஒரு உத்வேகம், ஆவேசம் என முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் சிம்புவின் மார்கெட் அவ்ளோதான் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் கெத்தாக வந்து களம் இறங்கினார்.
அதை திரையுலகமும் ஆச்சரியமாக பார்த்தது. மேலும் இதை அப்படியே சிம்பு பயன்படுத்திக் கொண்டே போனால்
இன்னும் உச்சத்தை அடைய வாய்ப்பிருக்கிறது என்று பல முன்னனி பிரபலங்கள் பலரும் தங்களுடைய அறிவுரைகளை வழங்கி வந்தனர்.
ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களை வீட்டிற்கு அனுப்பி விடுகிறாராம். சிம்புவை வைத்து வாலு திரைப்படத்தை இயக்கிய விஜய்சந்தர் மீண்டும் சிம்புவை வைத்து ஒரு பக்காவான ஆக்ஷன் படத்தை எடுக்கலாம் என்ற ஐடியாவில் இருக்க அதில் விஜயசாந்தி, விஜய்சேதுபதி ஆகியோரை நடிக்க வைக்கும் முயற்சியிலும் இருந்திருக்கிறார்.
இது விஷயமாக கூடவே ஒரு தயாரிப்பாளரையும் அழைத்துக் கொண்டு சிம்புவின் வீட்டிற்கு போக சிம்புவின் அம்மாவோ தடாலடியாக ஒரு சம்பளத்தை சொல்ல சத்தமில்லாமல் திரும்ப வந்திருக்கிறார் விஜய்சந்தர். கிட்டத்தட்ட 40 கோடி வரைக்கும் சிம்புவின் சம்பளம் இப்பொழுது உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் விநோத கண்டிஷன் போடும் ஹரீஷ் கல்யாண்… இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல!!
மேலும் தயாரிப்பாளர் லலித்தும் சிம்புவை அணுக அவரிடமும் 40 கோடி சம்பளத்தை கூறியிருக்கிறார்கள். இதனால் எந்த தயாரிப்பாளரும் அவரை அணுக தயங்குகிறார்கள். இன்னொரு பக்கம் சிம்பு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தாலொழிய இந்த மாதிரி சம்பளம் கேட்பது நியாயம். ஆனால் இந்த செயலால அவரை வைத்து படம் எடுக்கிறவர்கள் கூட பின்னுக்கு போய்விடுகிறார்களாம். வந்த வாய்ப்பையும் சரிவர பயன்படுத்தாமல் மீண்டும் சிம்புவின் வண்டி எங்கு போய் நிற்க போகிறதோ?..