சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் அரசன். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது. முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றது. சமீபத்தில் தான் இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இணைந்தார். ஏற்கனவே ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்த நிலையில் விஜய் சேதுபதியும் படப்பிடிப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் சிம்புவை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் நாள்தோறும் அங்கு குவிந்து விடுகின்றனர். இருந்தாலும் ரசிகர்களுக்காக தன்னுடைய நேரத்தையும் ஒதுக்கி அவர்களை சந்தித்து தொடர்ந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறார். முன்பு மாதிரி இல்லாமல் அரசன் திரைப்படத்தில் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் நடிப்பையும் கொடுத்து வருகிறார் சிம்பு.
இந்த படம் மட்டும் வெற்றியடைந்து விட்டால் மாநாடு திரைப்படம் எப்படி சிம்புவுக்கு ஒரு சிறந்த கம்பேக்காக இருந்ததோ அதைப்போல அரசன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு அசைக்க முடியாத கலைஞராக மாறிவிடுவார் சிம்பு. சமீபத்தில் தான் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு ரிலீஸ் செய்தார்கள். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அதில் ஆக்சன் காட்சிகள் நிறையவே இருக்கும். முதல் போஸ்டரிலேயே படம் எப்படிப்பட்ட படமாக வரப் போகிறது என தெரிந்துவிட்டது. போஸ்டரில் சிம்புவின் முகம் முழுவதும் ரத்தக்கரை படிந்த நிலையில் இருந்தது. அதிலிருந்து இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் மதுரையில் சிம்பு, ரசிகர்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறார்.
அந்த கூட்டத்தில் சிம்புவின் ரசிகர்கள் பல பேர் வந்து சிம்புவை சந்தித்தனர். ரசிகர்களுக்காக தடபுடலாக கறிவிருந்து சாப்பாடும் ஏற்பாடு செய்திருந்தார் சிம்பு. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் சிம்பு தன் ரசிகர்களை சந்தித்திருக்கிறார்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DSjh9EqEszI/?igsh=ODR3ZHBjem92eW9k
