சிம்பு புது படத்துக்கு எமனாக வந்த கொரோனா.....வந்தாலும் போனாலும் தலைவலிதான்!....
தமிழ் சினிமாவில் இனிமேல் இவருடைய மார்க்கெட் அவ்ளோதான் என்று நினைத்த ரசிகர்களை ’மாநாடு’ படத்தின் மூலம் திரும்ப வந்துட்டேனு சொல்லு என்று கெத்தாக வந்து நின்றவர் நடிகர் சிம்பு. பெரிய இடைவேளிக்கு பிறகு அற்புதமான ரீ என்ரியோடு அதுவும் மாஸான படத்தில் நடித்து நான் இன்னும் இருக்கிறேன் என்று நியாபக படுத்த வந்த மாதிரி இருந்தது இவருடைய அந்த கம் பேக்.
படமும் நல்ல வசூலை பெற்று மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆனார் சிம்பு, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரானா குமார் போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கையில் திடீரென இவரின் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் அந்த பிரச்சினையில் பிஸியாக இருக்கிறார் சிம்பு.
இதனிடையில் கொரானா குமார் படத்தின் படப்பிடிப்பை நடத்தலாமா வேண்டாமா என படக்குழு யோசித்து வருகின்றனராம்.ஏனெனின் கொரானா குறைந்து வருவதால் இந்த நிலைமையில் அதை பற்றி மையமாக வைத்து ஏன் படம் எடுக்க வேண்டும் என யோசிக்க அந்த முடிவையே விட்டு விட்டார்களாம். அதனால் அந்த இயக்குனருக்கு பதிலாக தற்போது லிங்குசாமியுடன் கூட்டணி அமைக்க சிம்பு முடிவு பண்ணியுள்ளாராம்.
மேலும் கொரானா குமார் படத்திற்காக ஐசரி கணேசனிடம் முன் தொகை பெற்றிருந்த சிம்பு அதை அப்படியே புதியதாக லிங்குசாமியுடன் இணைந்து உருவாகும் புதிய படத்திற்கு தொகையை மாற்றிக் கொண்டாராம்.