ஆளப்போறாரு STR!.. வித்தியாசமான கொள்கையை கையில் எடுக்கும் சிம்பு.. தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி..
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சிம்புவை பற்றிய செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. உடல் அளவிலும் சரி மனதளவிலும் சரி ஒரு முற்போக்கான சிந்தனையிலேயே இருப்பதாக தெரிகிறது. எதிலும் ஆழ்ந்து பார்க்கும் திறன், உற்று நோக்கும் திறன் என ஒரு அனுபவம் வாய்ந்த மனிதர் போலவே பேச ஆரம்பித்திருக்கிறார்.
இது ரசிகர்களும் விரும்புகின்றனர். இள வயதில் கன்னா பின்னானு இருந்தாலும் சமீபத்தில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது ரசிகர்கள் மட்டுமில்லாது பிரபலங்கள் மத்தியிலும் ஒரு நல்ல அபிப்ராயத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது பத்து தல படத்தின் புரோமோவுக்காக சிம்பு தன்னை தயார் படுத்தி வருகிறார். முற்றிலும் வேறொரு தோற்றத்தில் இருக்கும் சிம்பு அதே கெட்டப்பில் பொது இடங்களுக்கு வந்து ரசிகர்களோடு மகிழ்ச்சியாக கலந்துரையாடி செல்கின்றார்.
பத்து தல படத்திற்கு பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க 100 கோடி பட்ஜெட்டில் கமல் இந்தப் படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் கெரியரிலேயே இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் தயாராகும் முதல் படமாக இருக்க போகிறது.
இந்த நிலையில் சிம்பு ஒரு புதிய கொள்கையை கையில் எடுத்திருக்கிறாராம். ஏற்கெனவே மாநாடு படத்தின் வெற்றி, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை அடுத்து சிம்பு தனது சம்பளத்தை 40 கோடி அதிகரித்ததாக சில தகவல்கள் வெளியானது. இப்போது கமல் படத்தில் சேர்ந்திருப்பதால் கமலுக்காக 30 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்தது.
ஆனால் அவரின் கொள்கையால் இப்போது அதுவும் குறைந்திருக்கிறது. அவரது கொள்கை என்னவெனில் தன்னை விட அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்காக தன் சம்பளத்தில் கணிசமான தொகையை குறைக்கிறாராம் சிம்பு. அதன் காரணமாகவே கமல் படத்திற்காக 30 கோடியில் இருந்து 25 கோடியாக தன் சம்பளத்தை குறைத்துவிட்டாராம். இது அதிக பட்ஜெட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளருக்காக மட்டுமே என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : பாராட்டினாரு.. பாட்டு எழுத கூப்பிடவே இல்லை..அப்புறம்தான் புரிஞ்சது!. கவிஞர் சொன்ன ரகசியம்…