தற்போது சிம்பு அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அது ஒரு தனி மாஸ். இதுவரை அவர் எடுத்த படங்கள் எல்லாமே மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு மாபெரும் வெற்றியும் பெற்றிருக்கிறது .அந்த வகையில் சிம்பு வெற்றிமாறனுடன் இணைந்து இருப்பது சிம்புவுக்கு தான் ஒரு பிளஸ்.
ஏனெனில் ஒரு நல்ல கம்பேக்குடன் சிம்பு மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இதை அவர் சரியாக பயன்படுத்தி விட்டால் அவருடைய ரேஞ்சே வேறு மாதிரி மாறிவிடும். ஏற்கனவே விஜய் இப்போது அரசியலில் இறங்கி விட்டதால் விஜயின் இடம் காலியாக இருக்கும். அந்த இடத்திற்கு யார் வருவார்கள் என்ற ஒரு போட்டியே இப்போது தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது.
அதை சிம்பு தக்க வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். அதற்கு அவருடைய ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். இனிவரும் காலங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிம்பு நடித்தால் ஒழிய அவருடைய மார்கெட்டை தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்த நிலையில் அரசன் திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அரசன் திரைப்படத்திற்கு பிறகு சிம்பு அஸ்வத் மாரிமுத்துவுடன் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். ஏற்கனவே தேசிங்கு பெரிய சாமியுடன் ஒரு படத்தில் கமிட்டாகி அந்த படம் டேக் ஆஃப் ஆகாமலேயே இருக்கிறது. இதற்கிடையில் இன்னொரு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அஸ்வத் மாரிமுத்துவுக்கு பிறகு சிம்பு ஏ ஆர் முருகதாஸுடன் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அது சிம்புவின் 52 ஆவது படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் துப்பாக்கி படத்திற்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் எழுந்து மேலே வரவே இல்லை. கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய மதராசி திரைப்படமும் பெருசாக போகவில்லை. ஹிந்தியிலும் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தை எடுத்தார்.

அது அட்டர் ஃபிளாப்பானது. இப்படி அடுத்தடுத்து தோல்விகளையே கொடுத்து வரும் முருகதாஸுடன் சிம்பு இணைவது சரியாக இருக்குமா? இப்போதுதான் அவர் சரியான ரூட்டை பிடித்து போய்க் கொண்டிருக்கிறார். இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏன் சிம்பு ரிஸ்கை எடுக்கிறார் என்ற ஒரு கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்து வருகிறது,
