Connect with us

வேண்டாம் மறுபடியும் அந்த ரிஸ்க்க எடுக்காதீங்க…. சிம்புவை எச்சரிக்கும் ரசிகர்கள்….!

simbu

Cinema News

வேண்டாம் மறுபடியும் அந்த ரிஸ்க்க எடுக்காதீங்க…. சிம்புவை எச்சரிக்கும் ரசிகர்கள்….!

கோலிவுட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் சிம்பு குழந்தை முதல் திரையுலகில் நடித்து வருகிறார். என்னதான் இவருக்கு சினிமாவில் பல வருட அனுபவம் இருந்தாலும் இதுவரை இவர் சிக்காத சர்ச்சைகளே கிடையாது. தற்போது தான் ஏதோ எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வருகிறார்.

இடையில் அளவுக்கு அதிகமாக உடல் எடை அதிகரித்த சிம்பு பட வாய்ப்புகள் கிடைக்காமல் திணறி வந்தார். அதன் பின்னர் தான் கடுமையாக உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து மாநாடு என்ற சூப்பர் ஹிட் படத்தையும் கொடுத்தார். தற்போது கைவசம் ஏராளமான படங்களை சிம்பு வைத்துள்ளார்.

simbu

அதன்படி சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடிக்க சிம்பு தயாராகி வருகிறாராம்.

simbu

இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டராக நடிக்க உள்ள சிம்பு இந்த படத்திற்காக மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். ஏற்கனவே தாறுமாறாக கூடிய உடல் எடையை தற்போது தான் கஷ்டப்பட்டு குறைத்துள்ளார். இந்நிலையில் படத்திற்காக இப்படி ஒரு ரிஸ்க் தேவையா என ரசிகர்கள் சிம்புவை எச்சரித்து வருகிறார்கள்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top