இப்போ என் ரேஞ்சே வேற.! வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடிச்சி.!

by Manikandan |
maanaadu
X

தமிழ் சினிமா நடிகர்கள் ஒரு படம் ஹிட் கொடுத்தால், அடுத்த படம் அதனை விட பெரிய ஹிட் கொடுக்க வேண்டும். பெரிய படமாக அது வர வேண்டும் என மெனெக்கெடுவர். அதுபோல தான் ரசிகர்களும் எதிர்பார்ப்பார்கள். ஒரு படம் மெகா ஹிட்டாக கொடுத்து அடுத்த படம் அதனை விட சிறிய பட்ஜெட்டில் கொடுத்தால் அந்த படம் நன்றாக இருந்தால் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதனை தான் தற்போது சிம்புவும் பாலோ செய்கிறார் போலும். அதாவது,மாநாடு பெரிய ஹிட். அதனை அடுத்து வெந்து தணிந்தது காடு திரைப்படமும் பெரிய படமாக வளர்ந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை, கெளதம் மேனன் ஆக்சன் படம் என வளர்கிறது.

அதனால், அடுத்தடுத்த படங்களும் பெரிதாக வர வேண்டும் என சிம்பு மெனெக்கெடுகிறாராம். அதனால், அடுத்தடுத்த படங்களை, குறிப்பாக இன்னும் கொரோனா குமார், பத்து தல படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவே இல்லையாம்.

இதையும் படியுங்களேன் - எனக்குன்னே வருவீங்களா.?! அஜித்தை சீண்டும் விஜய்.! பின்னணி இதுதானா.?!

கொரோனா குமார் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்க கூறியுள்ளாராம். அதுவும் வில்லனாக பெரிய நடிகர்களை புக் செய்ய கூறியுள்ளாராம். அதனை குறித்து படக்குழு மேற்கொண்டு யோசித்து வருகிறதாம். இது போக ஓ மை கடவுளே பட இயக்குனர் படத்திலும் நடிக்க கதை கேட்டுள்ளார் சிம்பு. அதற்கும் இன்னும் கால்ஷீட் ஒதுக்கவில்லையாம்.

இன்னும் எந்த படத்திற்கும் கால்சீட் கொடுக்காத காரணத்தால் மீண்டும் சிம்பு பழையபடி மாறிவிட்டாரா என கிசுகிசுத்து வருகின்றனர்.

Next Story