கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சிம்பு.. தப்பா நினைக்காதீங்க இது வேறு தகவல்…

Published on: July 19, 2022
simbu_main_cine
---Advertisement---

சிம்பு மாநாடு பட ரிலீஸ் சமயத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களின் நடிக்க கமிட் ஆகியிருந்தார். அதில் முதல் படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு.

இந்த திரைப்படத்தை பட குழு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு கொண்டு வர உள்ளது. அதற்கு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதற்கு அடுத்ததாக ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ எனும் திரைப்படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாக இருந்தார் சிம்பு.

மாநாடு திரைப்படம் ரிலீசுக்கு முன்பே இந்த திரைப்படம் ஒப்பந்தமானதால், அப்போது சிம்பு சம்பளம் குறைவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.  மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, கொரோனா குமார் திரைப்பட பட்ஜெட் மிகவும் குறைவாக இருப்பதாக சிம்பு தரப்பு எண்ணியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – அந்த செய்தியை கேட்டு ஷாக்கான சூர்யா… பதறி அடித்து அவரே வெளியிட்ட ரகசிய செய்தி….

ஆதலால், படத்தை பெரிது படுத்த முதலில் சிம்பு தரப்பு கூறி வந்ததாம், பின்னர் சம்பள விவரம் என அடுத்தடுத்த முட்டுக்கட்டைகள் வர சிம்பு இந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் படக்குழு கண்டிப்பாக இந்த படத்தில் சிம்பு நடிப்பார் என கூறிவந்தது. ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, சிம்பு இந்த படத்தை கைவிட்டு விட்டார் என்றே தகவல் கூறுகின்றன. ஆதலால், தற்போது இயக்குனர் கோகுல், ஆர்.ஜே.பாலாஜியை வைத்து புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார் என்றும் தகவல் பரவி வருகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.