கமலுக்கு டாட்டா சொன்ன சிம்பு!. எஸ்.டி.ஆர் 48க்கு மாறும் இயக்குனர்!.. அட தயாரிப்பாளர் அவரா?!…

Published on: June 28, 2024
simbu
---Advertisement---

திறமையான நடிகராக இருந்தும், அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்தும் ஒரு நிலையான இடத்தை பிடிக்காமல் இருப்பவர் நடிகர் சிம்பு. அதற்கு வேறு யாரும் காரணமல்ல. யானை தன் மீது மண்ணை வாரி போட்டுக்கொள்வது போல சிம்புவே அவருக்கு அடிக்கடி ஆப்பு வைத்து கொள்வார்.

ஷூட்டிங்கிற்கு சரியாக வரமட்டார். தாமதமாக வருவார் அல்லது வரவே மாட்டார். இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார் என்பதுதான் சிம்பு மீது பல தயாரிப்பாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. பலமுறை இது பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது.

சமீபகாலமாக சிம்பு தன்னை மாற்றிக்கொண்டு மணிரத்னம் இயக்கி வரும் ‘தக் லைப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார். சிம்புவின் நடிப்பில் கடைசியாக பத்து தல படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இன்னமும் சிம்புவின் அடுத்த படம் வெளியாகவில்லை.

simbu
simbu

பத்து தல படத்திற்கு பின் ராஜ்கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்க ஒரு படத்தில் சிம்பு நடிப்பது உறுதியானது. இதற்காக உடல் உடையை குறைத்து, தாடி, முடியெல்லாம் வளர்த்து தோற்றத்தையே மாற்றினார் சிம்பு. இதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் வெளிநாட்டிலேயே இருந்தார். சிம்பு ரசிகர்கள் STR48 என்கிற ஹேஷ்டேக்குகளும் டிவிட்டரில் பதிவிட்டு வந்தனர்.

அது ஒரு சரித்திர கதை எனவும், சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கப்போகிறார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது வரை அது டேக் ஆப் ஆகவில்லை. இப்போது அதே ராஜ்கமல் தயாரிப்பில் கமல் நடித்து வரும் ‘தக் லைப்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இது தொடர்பான புகைப்படங்களும் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் டிராப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிற்து. ஒரு புதிய இயக்குனர் சொன்ன கதையில் சிம்பு நடிப்பதாகவும், சிம்பு மீது வழக்கு தொடர்ந்த வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.