இருட்டுல தப்பே பண்ண மாட்டீங்களா..? நான் பண்ணுவேன்...பத்திரிக்கையாளரை வாயடைக்க வைத்த சிம்பு...!
சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது பத்துதல படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இவர் நடித்து ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு.
சிலபல பிரச்சினைகளால் நீண்ட நாள்களாக சினிமாவிம் பார்க்க முடியாத இவரை மாநாடு படம் மிகவும் உயர்த்திக் காட்டியது. அந்த படத்தின் வெற்றி இவரின் மார்க்கெட்டையே உயர்த்தியது. படத்தின் வெற்றி தோல்வி ஒரு பக்கம் இருந்தாலும் சர்ச்சைகளுக்கு பேர் போன மன்னர் சிம்பு.
ஒரு சமயம் நிரூபர் ஒருத்தர் சூப்பர் ஸ்டாருக்கு பிறகு அவருடைய ஸ்டைலை உங்களிடம் காணமுடிகிறது. ரஜினிக்கு குவியும் குடும்ப ரசிகர்கள் உங்கள் படத்திற்கு வருவது மிக குறைவு. எப்படி உணர்கிறீர்கள் என கேட்டார். அதற்கு சிம்பு குடும்பபாங்கான படமும் வேண்டும். அதையும் தாண்டி நடுத்தர வயதை உடையவர்கள் தான் அதிக சினிமாவை பார்க்க வருகிறார்கள்.
அவர்களுக்காக எப்படி எடுக்க வேண்டுமோ அதே மாதிரி படத்தில் நடிக்க வேண்டியதுதான் என்று கூற குறுக்கீட்டு பேசிய நிரூபர் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மாதிரி கதை வந்தால் நடிப்பீர்களா என கேட்க அதையும் மீறி உள்ள அடல்டான கதைகளை எடுத்து அந்த மாதிரி படம் நான் பண்ணுவேன் என கூறி ஏன் நீங்கள் எல்லாம் இருட்டு அறையில் முரட்டு குத்து பண்ண மாட்டீங்களா? என நிரூபரை பதிலுக்கு கேட்டார். இதை கேட்ட நிரூபர் இதை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் எப்படி இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்? என ஆச்சரியத்தில் கேட்டார். அப்படியும் இருக்கனும் இப்படியும் இருக்கனும் என பேசி சமாளித்தார் சிம்பு.