எவ்ளோ தைரியம் இருந்தா இவங்கள நடிக்க வைச்சிருப்பீங்க...? சிம்புவின் கோபத்திற்கு ஆளான இயக்குனர்...!
சிம்பு கடைசியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘மாநாடு’. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவிற்கு இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக அமைந்து படமும் அமோக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பல படங்களில் சிம்பு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் சிம்புவும் வெங்கட் பிரபுவும் நெருங்கிய நண்பர்களும் கூட. இந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நெகடிவ் ரோலில் கலக்கிய படம் மங்காத்தா. அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த பட ரிலீஸ் நேரத்தில் சிம்பு ‘ஒஸ்தி’ என்ற படத்தின் சூட்டிங்கில் இருந்தாராம்.
மேலும் அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு மங்காத்தா படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க வேண்டும் என்பதற்காக கிளம்பி வந்து பர்ஸ்ட் ஷோ பார்த்தாராம். அஜித்திற்கு மங்காத்தா 50 வது படமாகும். படத்தை பார்த்து விட்டு சிம்பு வெங்கட பிரபுவை திட்டியதாக வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
என்னவெனில் அஜித் படம். அதுவும் 50 வது படம். அவர் படத்தில் பிரேம்ஜியையும் மகத்தையும் போட்டு ஒரு பாடலில் ஆட வைத்துள்ளீர்கள் என்று திட்டினாராம். அஜித் படத்தில் அவர்களுக்கு என்று தனி பாடலா என்று கேட்டாராம் சிம்பு. இதை வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறினார்.