‘பத்து தல’ படத்தில் நடிக்க சிம்பு காட்டிய தயக்கம்!.. டிஆர் சொன்ன ஒரே விஷயம்.. ஆளு சரண்டர்..
சிம்புவின் நடிப்பில் இன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘பத்து தல’ திரைப்படம். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஓப்லி என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். மேலும் ஏஆர்.ரகுமான் இசையில் பத்து தல படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன், அனு சித்தாரா, ரெடின் கிங்க்ஸ்லி, கலையரசன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகும் பத்து தல திரைப்படம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
இந்த படம் கன்னட திரைப்படமான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்காக முதலில் எடுக்கப்பட இருந்தது. ஆனால் இயக்குனர் கிருஷ்ணா மஃப்டி படத்தின் கருவை மட்டும் வைத்துக் கொண்டு பத்து தல படத்தை பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்.ஒரிஜினல் மஃப்டி படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதை தமிழில் எடுக்கும் போது சிவராஜ்குமாருக்கு இணையாக தமிழில் நடிப்பது ரஜினி மட்டுமே என்று எண்ணிக்கொண்டிருந்தனர். அதனால் ரஜினியை நடிக்க வைக்கலாமா என்றும் யோசித்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகே சிம்புவை அணுகியிருக்கின்றனர். ஆனால் முதலில் சிம்பு அந்த பாத்திரத்தில் நடிக்க தயக்கம் காட்டியிருக்கின்றார்.
மேலும் அந்தக் கதாபாத்திரத்தில் தங்கை செண்டிமெண்டும் இருக்குமாம். அதனால் டி.ராஜேந்திரன் இந்தக் கதையை கேட்டுவிட்டு சிம்புவிடம் தைரியமாக பண்ணு, காலங்காலமாக எனக்கு தங்கை செண்டிமெண்ட் தான் கைகொடுத்திருக்கிறது.
அதை போலவே உனக்கும் கண்டிப்பாக செட் ஆகும் என சொன்னாராம். அதன் காரணமாகவே சிம்பு பத்து தல படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.