Connect with us

போனி மாம்ஸ் என்னய்யா பண்ற.? அஜித் ரசிகர்களை புலம்ப வைத்த கார்த்தி, சிம்பு.?!

Cinema News

போனி மாம்ஸ் என்னய்யா பண்ற.? அஜித் ரசிகர்களை புலம்ப வைத்த கார்த்தி, சிம்பு.?!

அஜித் நடிப்பில் தற்போது அவரது 61வது திரைப்படம் விறுவிறுவென தயாராகி வருகிறது. மீண்டும் 3வது முறையாக இயக்குனர் வினோத் – அஜித்குமார் – தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க வினோத் திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. வலிமை திரைப்படத்திற்கு அப்டேட் கொடுக்காமல் வருடக்கணக்கில் காக்க வைத்தது போல இந்த படத்தில் நடக்காது என தயாரிப்பு தரப்பிடம் இருந்து தகவல்கள் வந்தாலும்,

தற்போது வரை அந்த தகவல் மட்டுமே வந்துள்ளது என்பது தான்  ரசிகர்களின் வேதனைக்குரிய செய்தி. படத்தின் தலைப்போ, மற்ற நடிகர் நடிகையர் அப்டேட் என எதுவும் வெளியாக வில்லை , ஆனால் தீபாவளி ரிலீஸ் என்று மட்டும் அவ்வப்போது தகவல் வெளிவருகிறது.

இதையும் படியுங்களேன் – தனுஷ் ஃபேன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி.! முதலமைச்சர் என்னவெல்லாம் சொல்லிருக்கார் கொஞ்சம் பாருங்க..,

ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருப்பதால், மற்ற பட நிறுவனங்கள் தங்கள் படத்தை அறிவித்து வருகின்றனர். அதன்படி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டு விட்டது.

இது போதாது என்று சிம்பு நடித்து வரும் பத்து தல திரைப்படத்தை தீபாவளிக்கு கொண்டு வர படக்குழு தீவிர முயற்சி செய்து வருகிறதாம். இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் விரைவில் AK61 தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்து புக் செய்து விடுங்கள் இல்லையென்றால் அந்த தீபாவளி தேதியும் கிடைக்காது என வருத்தத்தில் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top