இனிமே இப்படித்தான்!.. தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த சிம்பு!..

by Rajkumar |   ( Updated:2023-03-26 13:14:36  )
இனிமே இப்படித்தான்!.. தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த சிம்பு!..
X

தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படம் வெளிவந்த பிறகு அது சிம்புவிற்கு பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழில் வந்த முதல் டைம் லூப் திரைப்படமாக மாநாடு திரைப்படம் வெளியானது.

அதற்கு பிறகு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படங்களுக்காக உடல் எடையை குறைத்து வந்த சிம்பு மீண்டும் பத்து தல படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார்.

Pathu Thala

Pathu Thala

முன்பை விடவும் படப்பிடிப்பில் அதிக ஆர்வத்துடன் படப்பிடிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிலையில் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவிருக்கும் பத்து தல திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.

இனி பெரிய பட்ஜெட் படம் மட்டும்தான்:

அதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இதுவரை வந்த சிம்பு படங்களில் இதுதான் அதிக பட்ஜெட் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் இனி அதிக பட்ஜெட் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க போவதாக கூறியிருந்த நிலையில் தற்சமயம் சிம்புவும் கூட ஹை பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க போகிறார் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் அவரது தயாரிப்பில் சிம்பு ஒரு படம் நடிக்க வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அதிக பட்ஜெட் படமாக இருந்தால் மட்டும் கூறுங்கள் நடிக்கிறேன் என பதிலளித்துள்ளார் சிம்பு.

எனவே கமல் திரைப்படத்திற்கு பிறகு சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் அதிக பட்ஜெட் படங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story