ரஜினியை பார்த்தாவது கத்துக்கனும்… சிம்பு மேடையில் அழுவதை இனியாவது நிறுத்துவாரா?...
சிம்பு தற்போது தன்னை மெருகேற்றிக்கொண்ட நடிகராக இருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன் அவர் மீது புகார் கூறாத தயாரிப்பாளர்களே இல்லை என்று கூறலாம். படப்பிடிப்பிற்கு வரமாட்டார், டப்பிங் பேச வரமாட்டார் என அவர் மீது பல புகார்கள் எழுந்தன.
சிம்பு மீது எழுந்த புகார்கள்
அந்த காலகட்டத்தில் சிம்புவின் மார்க்கெட் முடிந்துப்போனது என்றே பலரும் நினைத்தனர். அச்சமயத்தில் அவர் கலந்துகொண்ட பல பேட்டிகளில் சிம்பு அழுவதை பார்க்கலாம். சமீபத்தில் அவர் தனது ரூட்டை மாற்றி தன் உடலையும் ஒரு இளம் கதாநாயகனைப்போலவே உருக்கிய பின், பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். எனினும் சிம்பு பொது மேடைகளில் தனது கடந்த காலத்தை நினைத்து கண்கலங்குவதை நிறுத்தவில்லை.
தயவு செய்து அழுகாதீங்க...
சிம்பு தற்போது நடித்துள்ள “பத்து தல” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 18 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வலைப்பேச்சு வீடியோவில் சிம்புவுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார்.
அதாவது “சமீப காலமாக சிம்பு எல்லா மேடைகளிலும் கண்ணீர் விடத் தொடங்கியுள்ளார். ரசிகர்கள் எல்லாம் கதறுகிறார்கள். பொதுவாக ஹீரோக்கள் அழுவதே ரொம்ப தவறாக இருக்கிறது.
ரஜினி மீது இல்லாத விமர்சனங்களே கிடையாது. ஆனால் ஒரு மேடையில் கூட அவர் வெளியே காட்டிக்கொண்டது இல்லை. அவர் அழுக ஆரம்பித்தால் வருடம் முழுவதும் அழுதுகொண்டே இருக்கலாம். கஷ்டம் என்பது அனைவருக்கும் வரும். திரையுலகம் என்பதே சூனியக்காரர்கள் சூழ்ந்த இடம்தான். ஆதலால் மிகவும் கம்பீரமாக இருக்கவேண்டும். ஆதலால் தயவு செய்து சிம்பு அழுதுவிடாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர் அந்தணன், டி.ராஜேந்தரின் பத்திரிக்கையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதால் அவருக்கும் சிம்புக்கும் மிக நெருங்கிய பழக்கம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சௌகார் ஜானகியிடம் சவால் விட்ட நடிகர் திலகம்… ஐயராகவே மாறிப்போன சிவாஜி கணேசன்… என்னவா இருக்கும்?