கமலுக்கு வாக்கு கொடுத்த சிம்பு!.. அதனால வால சுருட்டி வச்சிக்கிட்டு நடிப்பாராம்.. இதுதான் விஷயமா?!..

by Rohini |
simbu
X

simbu

Actor Simbu: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்து வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. பொதுவாக சிம்புவை பற்றி கூறும் போது குழந்தையில் இருந்து சினிமாவில் பழக்கப்பட்டவர் என்பதால்,

எங்கு நின்றால் கேமிராவில் ஃபோக்கஸ் ஆகும்? எப்படி நிற்க வேண்டும் என்பன போன்ற யுத்திகளை நன்கு தெரிந்தவர் சிம்பு என்று அவரைப் பற்றி நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்பது உண்டு. உண்மையிலேயே கமலுக்கு அடுத்த படியாக சிம்புவும் கலைத்துறையை பற்றி கரைத்து வைத்திருப்பவர் என்றுதான் சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: பக்கா ஸ்கெட்ச் போட்ட கமல்! ஒன்னு இல்ல – டபுள் ட்ரீட் கொடுக்க களத்தில் இறங்கும் ஆண்டவர்

ஆனால் அதை சரியாக சிம்பு பயன்படுத்தினாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சரியான நேரத்திற்கு சூட்டிங்கிற்கு வராமல் இருப்பது. நைட் சூட் என்றால் தவிர்ப்பது என்பன போன்ற பல சேட்டைகளை ஆரம்பத்தில் செய்து வந்தார் சிம்பு.

அதனால் உடல் எடை அதிகரித்து வாய்ப்புகள் குறைய தொடங்கியது. ஆனால் மாநாடு படம் சிம்புவிற்கு ஒரு சரியான கம்பேக்காக இருந்தது. மிகப்பெரிய வெற்றியை கொடுத்து மீண்டும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறார் சிம்பு.

இதையும் படிங்க: இளையராஜா செய்த வேலையில் கண்ணீர் விட்டு கதறிய பாரதிராஜா!.. அட அந்த படமா?!…

இப்போது கமல் புரடக்‌ஷனில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம். அந்தப் படம் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் ஜூலைக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்திற்காக கமலிடம் ஒரு சத்தியமும் செய்து கொடுக்கிறாராம் சிம்பு. அதாவது இந்தப் படம் முடியும் வரை ஒழுங்காக இருப்பதாகவும் வேறு எந்தப் படத்திற்கும் செல்ல மாட்டேன் என்றும் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம். படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க இருப்பதால் போஸ்ட் ப்ரடக்‌ஷனில் அதிக கவனம் செலுத்த இருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: இளையராஜா செய்த வேலையில் கண்ணீர் விட்டு கதறிய பாரதிராஜா!.. அட அந்த படமா?!…

Next Story