மாஸ் லுக்கில் சிம்பு.. வெந்து தணிந்தது காடு தெறி அப்டேட்....

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் மாநாடு. பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு நல்ல ஒரு கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படம் நல்ல வசூலையும் குவித்து வருகிறது. இந்த வெற்றி மாநாடு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், இப்படம் ஹிட் என்கிற மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் சிம்பு ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த வெந்து தணிந்தது காடு படத்திற்கு நடிக்க சென்றுவிட்டார்.

vendhu

இப்படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருவண்ணாமலை, மும்பை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

கையில் துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து Shoot begin என சிம்பு குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

simbu

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it