அண்ணே எனக்காக பண்ணுங்க ப்ளீஸ்!.. உதயநிதியிடம் கோரிக்கை வைத்த சிம்பு!...
Udhyanidhi: சினிமா எடுப்பதை விட முக்கியமானது அதை சரியாக வியாபாரம் செய்வது. ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தை வியாபாரம் செய்வதில் சில முறைகள் இருக்கிறது. நேரிடையாக அவரே தியேட்டர் அதிபர்களிடம் பேசி படங்களை ரிலீஸ் செய்வார். இதை சிலர் மட்டுமே செய்வார்கள்.
பெரும்பாலும் ஒரு வினியோகஸ்தர் மூலம் தமிழகத்தின் உள்ள எல்லா தியேட்டர்களிலும் படத்தை ரிலீஸ் செய்வார்கள். அந்த வினியோகஸ்தர் எல்லா தியேட்டர்களுக்கும் படத்தை கொடுப்பார். வசூலில் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் பிரிந்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: வசூலை வாரிக்குவிக்கும் வாழை… 3 நாளில் இத்தனை கோடியா?…
தயாரிப்பாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு ஒரு வினியோகஸ்தரிடம் ஒரு படத்தின் உரிமையை கொடுத்துவிடுவார். அதன்பின் லாப, நஷ்டத்திற்கு ஏற்றது போல் கணக்கு வழக்கை பேசிகொள்வார்கள். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் துவக்கத்தில் படங்களை தயாரித்து வந்தது.
சூர்யாவின் ஏழாம் அறிவு, சூர்யாவின் ஆதவன் என பல படங்களை இந்நிறுவனம் தயாரித்தது. மேலும், வினியோகமும் செய்ய துவங்கியது. கடந்த சில வருடங்களாகவே ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனமே வினியோகம் செய்து வருகிறது.
இதையும் படிங்க: நம்மவருக்குப் பிறகு மீண்டும் கமல், கரண் கூட்டணி… அடுத்த அதிரடி ஆரம்பம்..!
ஒருபக்கம் பட தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்தியன் 2, தக் லைப் போன்ற படங்களில் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் ஒரு தயாரிப்பாளர்தான். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய உதயநிதி ‘சில படங்களை பார்த்து அது நன்றாக இருந்தால் நாங்கள் அப்படத்தை வினியோகம் செய்வோம். சில சமயம் சம்பந்தப்பட்ட நடிகர் கோரிக்கை வைப்பார்.
வெந்து தணிந்தது காடு படம் உருவான போது சிம்பு எனக்கு போன் செய்து நீங்கள் இப்படத்தி வினியோகம் செய்யுங்கள் என கேட்டார். இல்ல சிம்பு.. நிறைய படம் பண்ணிட்டு இருக்கோம்.. உங்க தயாரிப்பாளரே பெரிய வினியோகஸ்தர்தான். அவர் செய்யட்டும்’ என்றேன். ஆனால், சிம்புவோ ‘இல்லணா, இந்த படத்தில் நீங்க இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். எனக்காக பண்ணுங்க’ என கோரிக்கை வைத்தார். எனவே, அந்த படத்தை நான் செய்தேன். அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றது’ என சொல்லி இருந்தார்.