ரசிகர்களுக்காக விட்டு கொடுத்த சிம்பு...! படத்துல எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறாரு பாருங்க...!

by Rohini |
simbu_main_cine
X

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராகவும் லிட்டில் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரின் மாநாடு படத்தின் வெற்றி இவரின் மார்க்கெட்டை உயர்த்தி விட்டது. மேலும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறது.

simbu1_icne

இந்த படத்தை அடுத்து பத்து தல படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவான படம் ஒஸ்தி. இந்த படத்தில் ரிச்சா கங்கோத்பயாய கதாநாயகியாக நடித்திருப்பார். மேலும் இந்தப் படம் ஹிந்தி ரீமேக்கான சல்மான் கான் நடித்த தபாங் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

simbu2_cine

இந்த படத்தில் சல்மான்கான் க்ளைமாக்ஸ் காட்சியில் சட்டையை கழட்டி போட்டு பாடிபில்டப்பை காட்டி சண்டை போடுவார். இதை மனதில் வைத்துக் கொண்டு சிம்பு தரணியிடம் இதே மாதிரி காட்சியை கொஞ்சம் மாற்றி எடுக்கலாம். ஏனெனில் பாடிபில்டப்புக்காக என்னால பிரியாணி எல்லாம் சாப்பிடாமல் இருக்க முடியாது.

simbu3_cine

ஆகையால் சட்டையை கழற்றாமல் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்கலாம் என கூற தரணியும் சரி என ஒப்புக் கொண்டாராம். ஆனால் பத்திரிக்கை நண்பர்கள் தபாங் படத்தின் ரீமேக் தானே சிம்புவும் உடம்பை காட்டுவார் என நினைத்து பத்திரிக்கையில் ”ஜிம்முக்கு போகும் சிம்பு, சிக்ஸ் பேக்ஸுடன் சிம்பு” என செய்தி வைரலாக பத்திரிக்கையில் வந்ததை பொய்யாக்க வேண்டாம், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவேண்டும் என நினைத்து 30 நாள்கள் ஜிம்முக்கு போய் பிடித்ததை சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டாராம் சிம்பு. இதை ஒரு மேடையில் அவரே தெரிவித்தார்.

Next Story