மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளும் ‘தீ.. தளபதி’ பாடல்!.. அந்த பாடலுக்கு சிம்புவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?..
வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிளை நேற்று மாலை இணையத்தில் படக்குழு வெளியிட்டார்கள். ரிலீஸ் ஆன இரண்டு வினாடியில் பல மில்லியன் வியூவ்ஸ்களை தாண்டி பல லைக்குகளை அள்ளி பாடல் சும்மா தெறிக்க விட்டது. விவேக் வரியில் தமன் இசையில் வெளியான தீ தளபதி பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார்.
இந்த தகவல் ஏற்கெனவே கசிந்த நிலையில் ஏதோ ஒரு ஸ்டூடியோவில் சிம்பு பாடுவது மாதிரியான புரோமோவை போட்டு பாடலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களை இன்னும் கொஞ்சம் தீப்பொறிகளை தெறிக்கவிட்ட மாதிரி அமைந்தது அந்த இரண்டாவது சிங்கிள்.
யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த பாடலை சிம்பு பாடி அவரே ஆடி நடித்திருப்பார் என்று. இன்று ஒரு வளர்ந்த நடிகராக மாஸ் நடிகராக வளர்ந்து நிற்கும் சிம்பு விஜய்க்காக அவரே புரோமோ பண்ணியிருக்கிறார் என்றால் ஆச்சரியமான விஷயம் தான்.
கிட்டத்தட்ட விஜய்க்கு நிகராக ரசிகர்களை வைத்திருக்கும் சிம்பு எப்படி சம்மதித்தார் என்ற கேள்விதான் அனைவர் மனதில் எழுந்துள்ளது. அதுவும் ஒரு அஜித் ரசிகராக இருக்கும் சிம்பு துணிவுடன் ஒரே நாளில் மோத இருக்கும் விஜயின் வாரிசு படத்திற்காக இப்படி ஒரு சிங்கிளை சத்தமில்லாமல் முடித்திருக்கிறார் என்றால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
சரி இப்படி பல சுவாரஸ்ய விஷயங்களை தாண்டி கோடிகளை சம்பளமாக வாங்கும் சிம்பு இந்த அளவுக்கு ஒரு மாஸ் ஹீரோவுக்காக அதுவுன் நடித்து ஒரு ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்றால் சம்பளம் அள்ளாமல் இருந்திருப்பார் என்ன? அந்த தகவல் தான் இப்போது வைரலாக பரவுகின்றது. 2.50 மில்லியன்களை தாண்டி போகும் இந்த பாடலுக்காக சிம்பு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? சம்பளமே வாங்கவே இல்லை என்பது தான் உண்மை. 2 மணி நேரத்திக்குள் பாடலை பாடியிருக்கிறார்.
அதன் பின் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என அழைத்து 2 மணி நேரத்திக்குள் முடித்துவிடலாம் என சொல்லி கிட்டத்தட்ட 6 மணி நேரம் அந்த பாடல் காட்சி படமாக்கியிருக்கிறார்களாம். ஆனால் உண்மையிலேயே சிம்பு சம்பளம் எதுவும் வாங்க வில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என்று சொல்லப்படுகிறது.