ஒரு படம் ஹிட்டுனா இப்படியா? - தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த சிம்பு, எஸ்.ஜே.சூர்யா...

by சிவா |
ஒரு படம் ஹிட்டுனா இப்படியா? - தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த சிம்பு, எஸ்.ஜே.சூர்யா...
X

பொதுவாக ஒரு நடிகர் ஒரு படத்தில் நடித்து அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நல்ல வசூலை ஈட்டிவிட்டால் அப்படத்தில் நடித்த ஹீரோ உடனே தனது சம்பளத்தில் சில கோடிகளை ஏற்றிவிடுவார். இது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் டாக்டர் படம் ஹிட்டுகு பின் தனது சம்பளத்தை ரூ.35 கோடியாக மாற்றி விட்டார். இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்.

இந்நிலையில், மாநாடு படம் வெற்றி பெற்றுள்ளதால் சிம்புவின் சினிமா கிராப் மேலே ஏறியுள்ளது. எனவே, அவர் தனது சம்பளத்தை ரூ.20 கோடியாக மாற்றிவிட்டாராம். அதேபோல், இப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களால் பாராட்டப்பட்ட எஸ்.ஜே.சூர்யாவும் தனது சம்பளத்தை சில கோடிகள் ஏற்றிவிட்டாராம்.

simbu

வித்தியாசமான வில்லத்தனத்தை அவர் செய்திருந்ததால் இயக்குனர்கள் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள். எனவே, அவரும் சம்பளத்தை ஏற்றிவிட்டாராம்.

சிம்பு தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் ஒப்பந்தமாகும் புதிய படங்களுக்கு அவர் புதிய சம்பளத்தை கேட்பார் எனத் தெரிகிறது.

காற்றக்கடிக்கும் போதே தூற்றிக்கொள்னு சும்மாவா சொன்னாங்க!..

Next Story