உங்கள நான் சும்மா விட மாட்டேன்.. கௌதம் மேனனுக்காக களத்தில் இறங்கிய சிம்பு

menon
Simbu: தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை மிகு நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்த சிம்பு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார். 40 படங்களுக்கும் மேல் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார். தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.
இது சிம்புவுக்கு 49வது படமாகும். இந்த படத்தின் பூஜை சமீபத்தில்தான் சென்னையில் நடந்தது. இந்தப் படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக களமிறங்குகிறார் சந்தானம். அந்த படத்தின் பூஜையின் போது கூட சந்தானமும் வருகை தந்தார். சிம்புவால் இந்த சினிமா உலகில் அறிமுகமானவர்தான் சந்தானம். அதை சந்தானம் எத்தனை மேடை ஏறினாலும் இதை சொல்லாமல் அவர் இறங்கியதே இல்லை.
சிம்புவை பற்றி பெருமிதமாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார் சந்தானம். அதை போல சமீபகாலமாக தமிழ் சினிமாத்துறையில் காமெடி படம் என்பதே பெரும்பாலும் வருவதே இல்லை. அப்படி வந்தாலும் ரசிகர்களை பெரிதாக ஈர்ப்பதுமில்லை. அதனால் காமெடிக்கு ஒரு வெற்றிடம் இருப்பதாகவே கருதப்படுகிறது. அதனால் மீண்டும் சந்தானம் என்னுடைய படத்தில் காமெடியனாக நடிப்பது மறுபடியும் ஒரு துவக்கமாக இருக்கட்டும் என சிம்பு கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று சந்தானம் ஹீரோவாக நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப் படத்தை தயாரிப்பது ஆர்யா. இந்த படத்தின் விழாவிற்கு சிம்புவும் அழைக்கப்பட்டார். சிம்பு மேடையில் பேசும் போது சந்தானத்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்தார். மேலும் படத்தில் கௌதம் மேனனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி கௌதம் மேனனை பற்றித்தான் அனைவரும் பேச ஆரம்பித்தனர். ஏனெனில் படத்தில் கௌதம் மேனன் இயக்கிய படங்களின் சில காட்சிகளை ஒன்றிணைத்து ரி கிரியேட் செய்திருக்கின்றனர். அதில் கௌதம் மேனனைத்தான் நடிக்க வைத்திருக்கின்றனர். அது பார்ப்பதற்கு மிகவும் காமெடியாக இருந்தது. இதையெல்லாம் குறிப்பிட்டு பேசிய சிம்பு ‘என்னுடைய டைரக்டரை என்ன பண்ணி வச்சிருக்கீங்க? அதனால் உங்கள நான் சும்மா விட மாட்டேன்’ என கிண்டலாக அந்த மேடையில் கூறினார்.