லீலைகளுக்கு பேர் போனவர்!.. இந்த நடிகையிடம் மட்டும் நெருங்க முடியவில்லை!.. சிம்புவுக்கா இந்த நிலைமை?..
உறவு காத்த கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகர் சிம்பு. குழந்தை பருவத்தில் இருந்தே கேமிராமுன் தோன்றியவர் இன்று வரை மக்களை மகிழ்வித்து வருகின்றார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க்கும் போதே ஏதோ சில வருடங்கள் அனுபவம் வாய்ந்த கலைஞனாக தன் திறமையை அப்பவே காட்டியவர் சிம்பு.
ஹீரோவாக முதன் முதலில் நடித்த படம் காதல் அழிவதில்லை என்ற திரைப்படம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகரி ஷார்மி நடித்திருந்தார். ஷார்மிக்கும் இதுதான் முதல் அறிமுகம் படம். இன்று தெலுங்கில் ஒரு முன்னனி நடிகையாக வலம் வருகிறார். ஷார்மி தான் சிம்புவின் முதல் நாயகியும் கூட.
இதையும் படிங்க : “இது மெகா சீரியல் இல்லடா, டப்பிங் சிரீயல்”… “வாரிசு” படத்தை கழுவி ஊற்றிய ப்ளு சட்டை மாறன்…
அதன் பின் தொடர்ச்சியாக தம், அலை, கோயில், என வரிசையாக பல படங்கள் நடிக்கும் சிம்பு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட நாயகிகளுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அந்த நடிகைகளில் சில பேருடன் காதல் வலையிலும் சிக்கினார் சிம்பு.
அதில் முக்கியமாக நடிகை நயன்தாரா சிம்பு காதல் தான் பரவலாக பேசப்பட்டு வந்தது. அவர் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. அப்போது கூட அவர்கள் இருவரும் அதை பற்றி எதுவும் பேசவில்லை. தான் நடித்த நடிகைகளை பற்றி சில பேட்டிகளில் கூறிவந்த சிம்பு நாயகிகள் பழகும் விதம், அவர்களின் நடிப்பு திறமை என அனைத்தையும் பாராட்டி கூறியிருக்கிறார்.
அதில் தொட்டி ஜெயா படத்தில் நடித்த நடிகை கோபிகா எப்போதும் அவர் பெற்றோருடன் தான் சூட்டிங்கிற்கு வருவாராம். யார் கூடயும் அந்த அளவுக்கு பேசமாட்டாராம். ஏன் அந்த படத்தில் நடித்த நாயகனான சிம்பு கூடயும் சரியாக பேசமாட்டாராம். இதை பற்றி பேசிய சிம்பு அவர் அப்படி இருந்தாலும் நடிப்பில் அற்புதப்படுத்துவார் என்று பெருமையாக கூறியிருக்கிறாராம். இந்த பதிவை சித்ரா லட்சுமணன் அவரது பேட்டியில் தெரிவித்தார்.